IPL 2023: பும்ரா இல்லை, 6ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகுமா? பலம் என்ன, பலவீனம் என்ன?

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெறுமா? அந்த அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

No Bumrah, will Mumbai Indians be champions for the 6th time? What are the strengths and weaknesses?

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தான் அந்த சீசன் முழுவதும் சாதகமாக அமைந்தது. ஏனென்றால், அந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டி உள்பட 12 போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கோ, 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கோ கடந்த சீசன் சாதகமாக இல்லை.

IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

கடந்த 15ஆவது சீசனில் மொத்தம் விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இதே போன்று தான் சென்னை அணியும் நிலையும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. இதனால், இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் இந்த 2 சாதனையும் இவங்களால தான் முடியும்; இன்னும் யாரும் முறியடிக்கல!

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள், கடந்த சீசன்களின் சாதனைகள், ஹோம் மைதானம் சாதகம், நெட் ரன் ரேட் விகிதம் ஆகியவற்றின் காரணமாக சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்க பலமாக இருந்த பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். இவர் இல்லாத நிலையில், அணிக்கு பக்க பலமாக இங்கிலாதின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை, 101ஆவது பந்தில் விக்கெட்: தட்டி தூக்கிய ரஷீத் கான் சாதனை!

கடந்த சீசனில் சொதப்பிய ரோகித் சர்மா இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் இணைந்து, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், அர்ஜூன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், குமார் கார்த்திகேயா சிங், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், பியூஸ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஷாம்ஸ் முலானி, ஜேஷன் பெஹ்ரெண்டாஃர்ப், நேஹல் வதேரா, விஷ்ணு வினோத், ராகவ் கோயல், டுயன் ஜான்சென்.

ஐபிஎல்லில் 701 பவுண்டரிகள், 136 சிக்சர்கள் அடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷிகர் தவான்!

மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டெவால்ட் பிரேவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா சிங், ஹிருத்திக் ஷோகீன் 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios