Asianet News TamilAsianet News Tamil

கேப்டனாக பொறுப்பேற்ற நிதிஷ் ராணா: கொல்கத்தா காளி கோயிலில் சாமி தரிசனம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிதிஷ் ராணா காளி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
 

Nitish Rana who took over as captain visit to  Kolkata Kali Temple ahead of PBKS vs KKR
Author
First Published Mar 29, 2023, 2:27 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயெ நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் தொடங்க உள்ளது. இதில், பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டு டான்ஸ் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

 

 

இதுவரையில் கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதன் பிறகு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெறவில்லை. இந்த நிலையில், கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த அணிகளுக்கு வாய்ப்பு ரொம்பவே அதிகம்!

இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்குப்பதிலாக நிதிஷ் ராணாவை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது. கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் ராணா மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் இடம் பெற்று நிதிஷ் ராணா விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். வரும் 30 ஆம் தேதி மொஹாலியிலிருந்து புறப்படும் கொல்கத்தா அணி பஞ்சாப் செல்கிறது. அங்கு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கொல்கத்தா பிளேயிங் லெவன்:

உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி சதங்களாக விளாசி சாதனை படைத்து நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த நாராயண் ஜெகதீசன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அதிரடி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். தற்காலிக கேப்டன் நிதிஷ் ராணா 3ம் வரிசையில் ஆடுவார். ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் 4ம் வரிசையிலும், ரிங்கு சிங் 5ம் வரிசையிலும் ஆடுவார்கள். ஆண்ட்ரே ரசல் ஃபினிஷராக ஆடுவார். 

IPL 2023: பும்ரா இல்லை, 6ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகுமா? பலம் என்ன, பலவீனம் என்ன?

கேகேஆர் அணியின் மேட்ச் வின்னரும் ஆல்ரவுண்டருமான சுனில் நரைனுடன் வருண் சக்கரவர்த்தி 2வது ஸ்பின்னராக ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக டிம் சௌதி - லாக்கி ஃபெர்குசன் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:

நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், என்.ஜெகதீசன், வைப் ஜகதீசன், சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், மந்தீப் சிங், ஷாகிப் அல் ஹசன்.

Follow Us:
Download App:
  • android
  • ios