ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த அணிகளுக்கு வாய்ப்பு ரொம்பவே அதிகம்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி செல்லும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கறப்படுகிறது.
 

Chennai Super Kings and Mumbai Indians are the teams have a very high chance of qualifying for the IPL play offs

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் திருவிழாவின் 16ஆவது சீசன் நாளை (31 ஆம் தேதி) மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் முதல் சீசனில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் புதிதாக களம் கண்டன. இந்த புதிய ரெண்டு அணிகளுமே ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 3ஆவது இடத்தையும் பிடித்தது. ஆம், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றது.

IPL 2023: பும்ரா இல்லை, 6ஆவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகுமா? பலம் என்ன, பலவீனம் என்ன?

இதே போன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 16 போட்டிகளில் பங்கேற்று இறுதிப் போட்டி உள்பட 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால், பல முறை சாம்பியன் பட்டம் எல்லாம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த இரு அணிகளுமே 14 போட்டிகளில் பங்கேற்று புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்கள் பிடித்தன.

IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

ஐபிஎல் பிளே ஆஃப் கணிப்பு:

ஒவ்வொரு சீசனும், பிட்ச் மற்றும் பவுண்டரி, சிக்சர்கள் என்று வானவேடிக்கை காட்டக் கூடிய வீரர்களின் திறமை, பவுலர்களின் விக்கெட்டுகள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு திருவிழா போன்று காட்சி இருக்கும். இதுவரை, விளையாடிய 950 போட்டிகளில், 564 போட்டிகள் கடைசி ஓவரில் முடிந்துள்ளன. 350 போட்டிகள் அணி எடுத்த ரன்களைப்ப் பொறுத்து அணிக்கு ஆதரவாக நடந்தன.

மேலும், 100 போட்டிகளில் 35 கடைசி பந்தில் வெற்றிகள் கிடைத்துள்ளன. இந்த போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் கடைசி 10 ரன்கள் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதைப் பொறுத்து அமைந்தது. மான்டே கார்லோ உருவகப்படுத்துதல் ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டை அடிக்கடி உருவாக்கும் டி & பி அட்வைஸரியால் (A premier valuation services provider - முதன்மையான மதிப்பீட்டு சேவை வழங்குநர்) பிளே ஆஃப்களுக்கு முன்னேறிய நான்கு அணிகளைக் கணிக்கப் பயன்படுத்துகிறது. ஆனால், இந்த ஆண்டு பல கடுமையான போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் தொடரின் முடிவை கணிப்பது மிகவும் கடினம். இவ்வாறு D & P சிமுலேட்டரில் பயன்படுத்துவதற்குப் பல்வேறு புள்ளி விவரங்களைப் பயன்படுத்தியது. 

ஐபிஎல் இந்த 2 சாதனையும் இவங்களால தான் முடியும்; இன்னும் யாரும் முறியடிக்கல!

அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம், ஹோம் மைதானம் சாதகம், நிகர ரன் விகிதம், ஒட்டுமொத்த முந்தைய சாதனை, தற்போதைய வேகம் மற்றும் மாதிரியின் ஒட்டுமொத்த விளக்கத்தை அதிகரிக்க உதவும் என்று கூறப்பட்டது. அதோடு, ஆய்வறிக்கையின்படி, ஐபிஎல் தரவை ஆய்வு செய்தது மற்றும் இந்த பண்புகளின் செயல்திறன், விநியோகம் மற்றும் மாறுபாடுகளை மதிப்பிடுவதற்காக மில்லியன் கணக்கான சாத்தியமான எதிர்கால காட்சிகளை உருவாக்க சீரற்ற மாதிரியைப் பயன்படுத்தியது.

இதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல்லில் 701 பவுண்டரிகள், 136 சிக்சர்கள் அடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷிகர் தவான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios