Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு தண்ணி காட்டிய ஏங்கல்பிரெக்ட் – லோகன் வான் பீக் – எக்ஸ்டிரா 33, நெதர்லாந்து 262 ரன்கள் குவிப்பு!

இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் குவித்துள்ளது.

Netherlands Scored 262 runs against Sri Lanka in 19th Match of World Cup at Lucknow rsk
Author
First Published Oct 21, 2023, 2:50 PM IST | Last Updated Oct 21, 2023, 2:50 PM IST

நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 19ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓடவுட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

2024 ஐபிஎல் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை – இந்தியாவில் தான் நடத்தப்படும் – அருண் சிங் துமல்!

இதில், விக்ரம்ஜித் சிங் 4 ரன்களில் கசுன் ரஜிதா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து கொலின் அக்கர்மேன் களமிறங்கி நிதானமாக விளையாடினார். ஆனால், அதற்குள்ளாக மேக்ஸ் ஓடவுட் 16 ரன்களில் ரஜிதா பந்தில் கிளீன் போல்டானார். அதன் பிறகு பாஸ் டி லீட் களமிறங்கினார். அதற்குள்ளாக கொலின் அக்கர்மேன் 29 ரன்களில் ரஜிதா பந்தில் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!

இவரைத் தொடர்ந்து லீட் 6 ரன்களில் வெளியேற அடுத்து வந்த தேஜா நிடமானுரு 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து 21.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக நெதர்லாந்து 150 ரன்கள் குவிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்போதுதான், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் இருவரும் களமிறங்கி நிதானமாக பொறுமையாக ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்து, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்த எம்.எஸ்.தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்து உலகக் கோப்பை வரலாற்றில் புதிய பார்ட்னர்ஷிப் சாதனையை உருவாக்கியுள்ளனர்.

AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி

 

இலங்கை:

பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனன்ஜெயா டி சில்வா, சமீகா கருணாரத்னே, துஷான் ஹேமந்தா, மகீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷன் மதுஷங்கா.

நெதர்லாந்து:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

2011 உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தை நினைவுச் சின்னமாக மாற்றிய வான்கடே ஸ்டேடியம்!

தொடர்ந்து விளையாடிய சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 82 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோலாஃப் வான் டெர் மெர்வே களமிறங்கினார். அவர் 7 ரன்களில் நடையை கட்டினார். ஒருபுறம் நிதானமாக விளையாடிய லோகன் வான் பீக் உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ரன் அவுட் வாய்ப்பிலிருந்து தப்பித்து முதல் அரைசதம் அடித்துள்ளார். அதன் பிறகு அவர் 75 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து மெர்வே 7 ரன்னிலும், பால் வான் மீகரென் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 33 ரன்களை எக்ஸ்டிராவாக கொடுக்க இறுதியாக நெதர்லாந்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் குவித்தனர்.

IPL 2023:தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தில் நினைவுச் சின்னம்;5 சீட்டை காலி செய்து வேலையை தொடங்கிய நிர்வாகம்!

இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு தொடர்ந்து விளையாடி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. பந்து வீச்சைப் பொறுத்த வரையில் இலங்கை சார்பில் கசுன் ரஜிதா மற்றும் தில்ஷன் மதுஷங்கா இருவரும் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மகீஷ் தீக்‌ஷனா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக ஒரே போட்டியில் முத்தையா முரளிதரன் மற்றும் பர்வேஸ் மஹரூப் ஆகியோர் முறையே 4/19 மற்றும் 4/25 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios