2024 ஐபிஎல் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை – இந்தியாவில் தான் நடத்தப்படும் – அருண் சிங் துமல்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசன் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் கூறியதாக தகவல் வெளியாகி வருகிறது.

IPL Chairman said that, No Possibility of Shifting IPL 2024 Event out of india due to 2024 General Elections rsk

ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐயால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த ஐபிஎல் திருவிழா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றன. கடைசியாக ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது.

மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!

இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 17ஆவது சீசன் நடக்கும் அதே வேளையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 17ஆவது சீசனானது இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் கூறியதாக தகவல் வெளியானது.

AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி

இதற்கு முன்னதாக, கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக எல்லாம் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்படாது என்று கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2011 உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தை நினைவுச் சின்னமாக மாற்றிய வான்கடே ஸ்டேடியம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios