மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!

பாகிஸ்தானுக்கு எதிரான 18ஆவது லீக் போட்டியில் டேவிட் வார்னர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் கோட்டைவிட்டதால் அவர் இந்தப் போட்டியில் 163 ரன்கள் குவித்தார்.

pakistan player usama mir drops david warner catch during Aus vs Pak Match at Bengaluru rsk

பெங்களுரூ சின்னச்சாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 18ஆவது கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி டேவிட் வார்னர் மற்று மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கி நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடினர். இருவரும் மாறி மாறி அரைசதம் அடித்து அதன் பிறகு சதமும் விளாசினர்.

AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி

இந்த நிலையில் தான் டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசி தொடர்ந்து 4 முறை பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக டேவிட் வார்னர் (2017 – 2023 வரையில்)

130(119), சிட்னி, 2017

179(128), அடிலெய்டு, 2017

107(111), டாண்டன், கிரிக்கெட் உலகக் கோப்பை 2019

100*(85), பெங்களுரு, 2023 – 124 பந்துகளில் 163 ரன்கள் (14 பவுண்டரி, 9 சிக்ஸர்)

இதற்கு முன்னதாக இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து 4 முறை சதம் (2017 -18) விளாசியிருந்தார். மேலும், உலகக் கோப்பையில் அதிக முறை சதம் விளாசியவர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பையில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

2011 உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தை நினைவுச் சின்னமாக மாற்றிய வான்கடே ஸ்டேடியம்!

இதற்கு முன்னதாக உலகக் கோப்பையில் சதம் விளாசியவர்கள்:

ரோகித் சர்மா – 7

சச்சின் டெண்டுல்கர் – 6

ரிக்கி பாண்டிங் – 5

குமார் சங்கக்காரா – 5

டேவிட் வார்னர் – 5

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் சதம் விளாசியவர்கள் பட்டியலில் வார்னர் மற்றும் மார்ஷ் இணைந்துள்ளனர்.

உபுல் தராங்கா – திலகரத்னே தில்ஷன் (இலங்கை) vs ஜிம்பாப்வே, பல்லேகலே, 2011

உபுல் தராங்கா – திலகரத்னே தில்ஷன் (இலங்கை) vs இங்கிலாந்து, கொழும்பு, 2011 உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டி

ரோகித் சர்மா and கேஎல் ராகுல் (இந்தியா) vs இலங்கை, லீட்ஸ், 2019

டேவிட் வார்னர் and மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், பெங்களூரு          , 2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்த வீரர்கள்:

372 – கிறிஸ் கெயில் – மார்லன் சாமுவேல்ஸ் (வெஸ் இண்டீஸ்) vs ஜிம்பாப்வே, கான்பெர்ரா, 2015

318 – சவுரவ் கங்குலி - ராகுல் டிராவிட் (இந்தியா) vs இலங்கை, டாண்டன், 1999

282 – திலகரத்னே தில்ஷன் – உபுல் தரங்கா (இலங்கை) vs ஜிம்பாப்வே, பல்லேகலே, 2011

273* - டெவான் கான்வே – ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) vs இங்கிலாந்து, அகமதாபாத், 2023

260 – டேவிட் வார்னர் – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) vs ஆப்கானிஸ்தான், பெர்த், 2015

259 – மிட்செல் மார்ஷ் – டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) vs பாகிஸ்தான், பெங்களூரு, 2023

IPL 2023:தோனி அடித்த சிக்ஸர் விழுந்த இடத்தில் நினைவுச் சின்னம்;5 சீட்டை காலி செய்து வேலையை தொடங்கிய நிர்வாகம்!

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து தொடக்க வீரர்களாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தில்ஷன் மற்றும் தரங்கா இருவரும் 282 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்திருந்த போது அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை உசாமா மிர் கோட்டைவிட்டார். இதனால் வார்னர் சதம் விளாசினார். இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் கோட்டைவிட்டதால் வார்னர் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios