கடைசி ஓவரில் 1 விக்கெட், 4 ரன்களில் பரிதாபமாக வெளியேறிய சீகம் மதுரை பாந்தர்ஸ்: குவாலிஃபையர் 2ல் நெல்லை!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்களில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்று எலிமினேட்டர் போட்டி நடந்தது. இதில், புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், 4ஆவது இடத்திலுள்ள சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்த்து. இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அதன்படி, நெல்லை அணியில் கேப்டன் அருண் கார்த்திக் 18 ரன்களில் வெளியேறினார். சூர்யபிரகாஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று நிதிஷ் ராஜகோபால் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்த சோனு யாதவ், 17 ரன்கள் எடுக்க, விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்தது. பின்னர், 212 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி விளையாடியது.
பிறந்தநாள் கேக் வெட்டி செல்லப்பிராணிகளுக்கு கொடுத்த எம்.எஸ்.தோனி; வைரலாகும் வீடியோ!
தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் 40 ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஆதித்யா கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினார். அவர், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கடைசி வரை போராடிய ஸ்வப்னில் சிங் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மதுரை அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 14 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்களில் தோல்வி அடைந்து பரிதாபமாக டிஎன்பிஎல் தொடரிலிருந்து எலிமினேட்டாகியுள்ளது.
இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி 2ஆவது குவாலிஃபையர் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
பார்படாஸ் வீரர்களுக்கு பேட், ஷூ பரிசாக கொடுத்த முகமது சிராஜ்!