பார்படாஸ் வீரர்களுக்கு பேட், ஷூ பரிசாக கொடுத்த முகமது சிராஜ்!
பார்படாஸ் இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், பேட் மற்றும் ஷூ ஆகியவற்றை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, அங்கு 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியை உள்ளூர் வீரர்களுடன் இணைந்து விளையாடியுள்ளனர். இந்த நிலையில், பார்படாஸ் இளம் வீரர்களுக்கு முகமது சிராஜ் பேட் மற்றும் ஷூஆகியவற்றை பரிசாக வழங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்: இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள காயமடைந்த ஆவேஷ் கான்!
இதுதவிர இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை ரசிகர்களுக்கு பரிசாக வழங்கினார். வரும் 12 ஆம் தேதி டோமினிகாவில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது.
இந்த அணியெல்லாம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்: சவுரவ் கங்குலி கணிப்பு!
இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.