பெங்கால் டைகர், கொல்கத்தா தாதாவின் 51ஆவது பிறந்தநாள்; சவுரவ் கங்குலி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.700 கோடி ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான கேப்டன்களில் சவுரவ் கங்கிலியும் ஒருவர். கொல்கத்தா தாதா மற்றும் பெங்கால் டைகர் என்றும் அழைக்கப்படுகிரார். சவுரவ் கங்குலியின் கீழ் உருவாக்கப்பட்ட வீரர்கள் தான், தோனி கேப்டனாக இருந்த போது 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்: இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள காயமடைந்த ஆவேஷ் கான்!
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று விளையாடிய கங்குலி இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கங்குலி அதன் பிறகு பிசிசிஐயின் தலைவராக இருந்தார்.
இந்த அணியெல்லாம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்: சவுரவ் கங்குலி கணிப்பு!
கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் கங்குலியின் வீடு மட்டும் ரூ.7 கோடி சொத்து மதிப்பு கொண்டதாகும். இதே போண்டு லண்டன் நகரில் 2 அறைகளைக் கொண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். மேலும், ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் என்று 6 விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். 2 விலை உயர்ந்த பைக்குகளையும் கங்குலி வைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 11 நிறுவங்களின் விளம்பர தூதராகவும் கங்குலி செயல்பட்டு வருகிறார். மான்கிட் பார்மா, திரிபுரா டூரிசம், ராணா குரூப், பந்தன் வங்கி, பூமா, வீக்கோ, லாய்ட் ரோப்ஸ், மை11சர்க்கிள், செனோ கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், லக்ஸ் கோஸி மற்றும் டிரீம் செட் கோ ரிச் மேரி, கிளாஸ் பிளஸ், கோக கோலா இந்தியா, ஜாய்வில்லே, ஷாபூர்ஜி ஹவுசிங் என்று பல நிறுவனங்களின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கல்வி நிறுவங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வர்ணனையாளர் ஆகியவற்றின் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார். இதன் மூலமாக சவுரவ் கங்குலியின் சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ.700 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,212 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று 311 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,363 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சிலும் விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.