உலகக் கோப்பை தகுதிச் சுற்று சூப்பர் சிக்ஸ் பிரிவில் நெதர்லாந்து அணியின் வீரர் பாஸ் டி லீடே 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா உள்பட பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

ஜெய் தோனி, ஜெய் ஜெய் தோனி; 77 அடி உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்!

இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை அணி 9ஆவது அணியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறின. இதையடுத்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு உலகக் கோப்பைக்கான வாய்ப்பு இருந்தது. இதில் ஜிம்பாப்வே அணி அந்த வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.

MS Dhoni: முதல்வர்கள் முதல் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட், சினிமா பிரபலங்கள்!

இதையடுத்து நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் சிக்ஸ் 8 ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 50 ஒவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் மெக்முல்லன் 106 ரன்கள் சேர்த்தார். ரிச்சி பெர்ரிங்டன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தனது ஃபர்ஸ்ட் டி20, முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய தோனி!

இதில், பாஸ் டி லீடே 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் கொடுத்தார். இதையடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக பாஸ் டி லீடே 92 பந்துகளில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக நெதர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில், பாஸ் டி லீடேயின் தந்தையான டிம் டி லீடி கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடினார். அதுமட்டுமின்றி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது விக்கெட் உள்பட முக்கியமான 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இப்படி தனது தந்தை உலகக் கோப்பையில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து மகனும் தற்போது சாதனை படைத்து வருகிறார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக்கு 10ஆவது அணியாக தகுதி பெற்றது. இதன் மூலமாக, இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நவம்பர் 11 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது.

இது தவிர, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து அணி,

அக்டோபர் 06 – பாகிஸ்தான் – நெதர்லாந்து – ஹைதராபாத்

அக்டோபர் 09 – நியூசிலாந்து – நெதர்லாந்து – ஹைதராபாத்

அக்டோபர் 17 – தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து – தர்மசாலா

அக்டோபர் 21 – நெதர்லாந்து - இலங்கை

அக்டோபர் 25 – ஆஸ்திரேலியா – நெதர்லாந்து – டெல்லி

நவம்பர் 01 – நெதர்லாந்து – ஆப்கானிஸ்தா.

நவம்பர் 8 – இங்கிலாந்து – நெதர்லாந்து – புனே

நவம்பர் 11 – இந்தியா – நெதர்லாந்து – பெங்களூரு