Asianet News TamilAsianet News Tamil

ஜெய் தோனி, ஜெய் ஜெய் தோனி; 77 அடி உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்!

தோனியின் 42ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று 77 அடி உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

Fans Doing Milk abhishekam to MS Dhoni 77 Feet Cut out in Andhra Pradesh for His Birthday Celebration
Author
First Published Jul 7, 2023, 4:40 PM IST

கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. தான் ஒரு கிரிக்கெட் வீரராக வந்து இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிவேன் என்று தோனி அப்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.

MS Dhoni: முதல்வர்கள் முதல் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட், சினிமா பிரபலங்கள்!

ஆரம்பத்தில் கால்பந்து விளையாடி வந்த தோனி, கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்தி முதலில் விக்கெட் கீப்பராக பயிற்சியை மேற்கொண்டார். அதன் பிறகு பேட்டிங்கிலும் பயிற்சியை தொடங்கி உள்ளூர் போட்டிகளில் அதுவும் பீகார் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார்.

தனது ஃபர்ஸ்ட் டி20, முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய தோனி!

அப்போது தான் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். முதலில் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக டிசம்பர் 23, 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி ஒரு பந்து தான் விளையாடினார். அந்தப் பந்திலேயும் ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் சவுரவ் கங்குலி தான் கேப்டனாக இருந்தார்.

கங்குலி, சச்சின் யாரும் படைக்காத சாதனையை படைத்த தோனி!

இதே போன்று டிசம்பர் 2, 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி 53 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனினும், இந்தப் போட்டி மோசமான வானிலை காரணமாக டிராவில் முடிந்தது. முதல் 3 நாட்கள் போட்டி மழை, மோசமான வானிலை காரணமாக நடக்கவில்லை. கடைசி 2 நாட்கள் மட்டுமே போட்டி நடந்தது.

ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!

இதையடுத்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியிலும் தோனி 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தனது கடைசி டி20 போட்டியில் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக இருந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையும் கைப்பற்றியுள்ளார்.

மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தோனி தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் முதல் உலக ரசிகர்கள் வரையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத வகையில், 77 அடி உயரத்தில் தோனிக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

அதோடு, அந்த கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து தோனியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ஹைதராபாத்தில் தோனிக்கு 52 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios