கங்குலி, சச்சின் என்று யாரும் செய்யாத சாதனையான டி20, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிக் கொடுத்துள்ளார்.கங்குலி, சச்சின் என்று யாரும் செய்யாத சாதனையான டி20, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிக் கொடுத்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று விளையாடியவர் எம்.எஸ். தோனி. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்து இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடம் பெற்று விளையாடிய மகேந்திர சிங் தோனி, இந்திய அணியில் யாரும் செய்யாத சாதனையை இந்திய அணிக்காக செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!
ஆம், தோனி தலைமையிலான இந்திய அணி முதலில் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அடுத்து 2011 ஆம் ஆண்டு ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2010, 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
தோனியின் உருவம் பொறித்த புகைப்படத்தை பரிசாக வழங்கிய ரசிகர்: வைரலாகும் புகைப்படம்!
இதுவரையில் இந்திய அணியில் கேப்டனாக இருந்த யாரும் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியது இல்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓய்வு பெற்றார். எனினும், ஐபில் தொடர்களில் இடம் பெற்று வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5ஆவது முறையாக கைப்பற்றிக் கொடுத்தார்.
இந்த நிலையில், தோனி இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரையில் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
