ஹைதராபாத்தில் 52 அடியில் கட் அவுட்; தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!
எம்.எஸ்.தோனியின் 42ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதராபாத்தில் 52 அடியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஞ்சியில் பிறந்து வளர்ந்துவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். அணியில் இடம் பெற்று 3 ஆண்டுகளில் கேப்டனாகவும் பொறுப்பெற்றார். 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் ஷார்ட் பார்ம் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். இதையடுத்து 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார்.
தோனியின் உருவம் பொறித்த புகைப்படத்தை பரிசாக வழங்கிய ரசிகர்: வைரலாகும் புகைப்படம்!
இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைகளை கைப்பற்றியது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சவுரவ் கங்கிலி, அணில் கும்ப்ளே ஆகியோர் செய்யாத சாதனையை தோனி படைத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தவிர, ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக இருந்து 5 முறை சாம்பியன்ஷிப் டைட்டில் வாங்கி கொடுத்துள்ளார். கிரிக்கெட் தவிர கால்பந்திலும் சிறந்து விளங்குபவர்.
விட்டு விட்டு மழை; டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி நெல்லை வெற்றி: கடைசி போட்டியிலும் திருச்சி தோல்வி!
தோனி இந்திய பிராந்திய இராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் (106 பாரா டிஏ பட்டாலியன்) கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியைப் பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரராக நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைக்காக இந்திய ராணுவத்தால் 2011ல் அவருக்கு கவுரவ பதவி வழங்கப்பட்டது.
சீனியர்ஸுக்கு ஓய்வு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: எங்கயோ போகும் டீம் இந்தியா; டி20 அணி அறிவிப்பு!
இந்த நிலையில், தோனி ஜூலை 7ஆம் தேதி நாளை தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, ஹைதராபாத்தில் 52 அடியில் அவருக்கு கட் ஒன்றை ரசிகர்கள் வைத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.