விட்டு விட்டு மழை; டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி நெல்லை வெற்றி: கடைசி போட்டியிலும் திருச்சி தோல்வி!
திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் ஆணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடந்தது. இதில், பா11சி திருச்சி அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்து வீச்சு தீர்மானித்தது. அப்போது திடீரென்று மழை பெய்தது. இதையடுத்து, சிறிது நேரத்தில் மழை விடவே, போட்டி தொடங்கப்பட்டது. முதல் 6 ஓவர்களில் திருச்சி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் ஹீரோ ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு மறுப்பு: முதல் முறையாக டி20ல் களமிறங்கும் திலக் வர்மா!
இதில், தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ 18 ரன்களில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் ராஜ்குமார் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சரண் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் களமிறங்கிய ஜாஃபர் ஜமால் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற திருச்சி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சீனியர்ஸுக்கு ஓய்வு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: எங்கயோ போகும் டீம் இந்தியா; டி20 அணி அறிவிப்பு!
போட்டியின் 6ஆவது ஓவர் முடிந்த பிறகு பலத்த மழை பெய்த நிலையில், போட்டி ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் மழை பெய்த நிலையில், நெல்லை அணிக்கு 16 ஓவர்களில் 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை மனதில் வைத்து அதிரடியாக ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் கேப்டன் அருண் கார்த்திக் 13 ரன்களில் ஆட்டமிழக்க, லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
அடுத்து வந்த அஜிதேஷ் குருசாமி 56 ரன்கள் எடுக்க, நிதிஷ் ராஜகோபால் 35 ரன்கள் சேர்க்க, கடைசியாக 11.5 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 135 ரன்கள் எடுத்து 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று 7 போட்டிகளில் விளையாடிய பா11சி திருச்சி அணி 7 போட்டியிலும் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
வரும் 7ஆம் தேதி லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் குவாலிஃபையர் போட்டி நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி சேலத்தில் உள்ள எஸ்.சி.எஃப் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?