Asianet News TamilAsianet News Tamil

முடி திருத்தம் செய்யும் கடைக்கு சென்று காசு கொடுக்காமல் வந்த அலெக்ஸ் கேரிக்கு கெடு விதித்த கடைக்காரர்!

இங்கிலாந்தில் உள்ள சலூன் கடைக்கு சென்ற ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரி ரூ.2700 கொடுக்காமல் சென்றதைத் தொடர்ந்து, நாளைக்குள்ளாக கொடுக்க வேண்டும் என்று கடைக்காரர் கெடு விதித்துள்ளார்.

Australia Player Alex Carey leaving without giving payment of Rs 2718 in the barber shop
Author
First Published Jul 8, 2023, 10:58 PM IST

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் 6ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த போட்டியின் போது 2ஆவது இன்னிங்ஸில் ஆஸி, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எந்த மைதானமாக இருந்தாலும் சரி, எந்த டீமாக இருந்தாலும் சரி எதற்கும் நாங்கள் ரெடி: பாக், கேப்டன் பாபர் அசாம்!

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் வீரர்கள் முதல் பிரதமர்கள் வரை ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என்று ஒவ்வொருவரும் விவாதம் செய்தனர். இந்த நிலையில், ஆஸி வீரர்கள் அலெக்ஸ் கேரி, மார்னஸ் லபுஷேன், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள முடி திருத்தும் கடைக்கு சென்றுள்ளனர்.

பிறந்தநாள் கேக் வெட்டி செல்லப்பிராணிகளுக்கு கொடுத்த எம்.எஸ்.தோனி; வைரலாகும் வீடியோ!

கடை அடைக்கும் நேரம் பார்த்து அவர்கள் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் அனைவருக்கும் கடை உரிமையாளர் முடி திருத்தம் செய்துள்ளார். அதன் பிறகு அனைவரும் கார்டுகளை கொடுக்க, பணம் மட்டுமே வாங்கப்படும் என்று உரிமையாளர் கூறியுள்ளார். அதன் பிறகு லபுஷேன், கவாஜா மற்றும் வார்னர் ஆகியோர் கையில் வைத்திருந்த பணத்தைக் கொடுத்துள்ளனர்.

பார்படாஸ் வீரர்களுக்கு பேட், ஷூ பரிசாக கொடுத்த முகமது சிராஜ்!

ஆனால், அலெக்ஸ் கேரியிடம் கார்டு மட்டுமே இருந்துள்ளது. ஹோட்டலுக்கு சென்றுவிட்டு பணத்தை அனுப்புவதாக கூறியுள்ளார். இதனால், கடை உரிமையாளர் திங்கள் கிழமை வரையில் கெடு விதித்துள்ளார். முடி திருத்தம் செய்ததற்கு 30 யூரோ தர வேண்டுமாம். இந்திய மதிப்பில் ரூ.2718 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் டைகர், கொல்கத்தா தாதாவின் 51ஆவது பிறந்தநாள்; சவுரவ் கங்குலி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios