எந்த மைதானமாக இருந்தாலும் சரி, எந்த டீமாக இருந்தாலும் சரி எதற்கும் நாங்கள் ரெடி: பாக், கேப்டன் பாபர் அசாம்!

எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

Pakistan Captain Said that We are ready for anything, no matter the ground, no matter the team

இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் நடக்கும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

பிறந்தநாள் கேக் வெட்டி செல்லப்பிராணிகளுக்கு கொடுத்த எம்.எஸ்.தோனி; வைரலாகும் வீடியோ!

அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறுகையில், உலகக் கோப்பை தொடருக்காக கண்டிப்பாக இந்தியாவிற்கு செல்வோம். இந்தியாவிற்கு எதிராக மட்டுமே உலகக் கோப்பையில் விளையாடவில்லை. மொத்தம் 9 போட்டிகளில் விளையாட உள்ளோம்.

பார்படாஸ் வீரர்களுக்கு பேட், ஷூ பரிசாக கொடுத்த முகமது சிராஜ்!

ஒரு கிரிக்கெட் அணியாக நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். எந்த மைதானத்திலும் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம். அது எந்த அணியாக இருந்தாலும் சரி. ஒரு கேப்டனாகவும், வீரராகவும் அனைத்து நாடுகளிலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் டைகர், கொல்கத்தா தாதாவின் 51ஆவது பிறந்தநாள்; சவுரவ் கங்குலி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios