ஜெர்சி நம்பர் 7: எம்.எஸ். தோனி 0007 என்ற நம்பர் பிளேட் கொண்ட மெர்சிடிஸ் ஜி கிளாஸ் கார் ஓட்டும் வீடியோ வைரல்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி 0007 என்ற நம்பர் பிளேட் கொண்ட மெர்சிடிஸ் ஜி கிளாஸ் பென்ஸ் கார் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கபில் தேவ் மற்றும் தோனியைத் தவிர எந்த இந்திய கேப்டனும் இதுவரையில் உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவ்பிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.
இந்திய அணிக்கு டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 5 முறை சாம்பியன் டைட்டில் வென்று கொடுத்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, முன்னாள் அணி வீரர்களுக்கு விருந்து கொடுப்பது முதல் நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் சுற்று பயணம் என்று ஓய்விறு பிறகான தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.
அதே நேரத்தில், தோனி, பயணங்களின் போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து அன்பை பரிமாறி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில், எம்.எஸ்.தோனி தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் கேப்டனாக இடம் பெற்றுள்ளார். ஆதலால், கடந்த சீசனில் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இல்லை இல்லை இன்னொரு சீசன் விளையாட இருப்பதாக அவரே அறிவித்தார்.
கிரிக்கெட் தவிர கார், பைக் மீது அதிக பிரியம் கொண்ட தோனி தனது வீட்டில் கார் மற்றும் பைக்குகளை நிற்க வைப்பதற்காக தனியாக கேரேஜ் ஒன்றை வைத்திருக்கிறார். அந்தளவிற்கு கார், பைக் மீது அதிக பற்று கொண்டவர். இந்த நிலையில், தான் Mercedes G Class மெர்சிடஸ் ஜி கிளாஸ் கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காரின் விலை ரூ.2.55 கோடி முதல் ரூ.4 கோடி வரையில் ஆகும். போக்குவரத்து விதிகளை மதிக்கும் வகையில் அந்த காரில் ஏறி அமர்ந்ததும் தோனி முதலில் சீட் பெல்ட் அணிந்துள்ளார். அந்த காரின் நம்பர் பிளேட் 0007. இந்திய அணியில் தோனியின் ஜெர்சி நம்பர் கூட 7. ஐபிஎல் சிஎஸ்கே அணியில் தோனியின் ஜெர்சி நம்பர் 7.
MS Dhoni driving Mercedes G Class with 0007 number plate. pic.twitter.com/JVh7CwYfMU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 29, 2023
- CSK
- CSK Released Players List
- CSK Retained Players List
- Chennai Super Kings
- IPL 2024
- IPL 2024 Auction
- IPL Auction 2024
- Indian Cricket Team
- Indian Premier League
- JH 01 FB 007
- MS Dhoni
- MS Dhoni 0007 Number Plate Car
- MS Dhoni Bike Collection
- MS Dhoni Car Collection
- MS Dhoni Driving Mercedes G Class Car
- MS Dhoni Driving Video
- MS Dhoni Jersey Number
- Mercedes G Class Benz Car
- Mercedes G Class Benz Car 007 Number
- JH01FB001