MS Dhoni Autograph Video: ரசிகரின் சூப்பர் பைக்கை நல்லா தொடச்சு, ஆட்டோகிராஃப் போட்ட தோனி – வைரலாகும் வீடியோ!
ரசிகர் வாங்கிய புதிய பைக்கை தனது டீ-சர்ட்டால் நன்றாக துடைத்துவிட்டு, ஆட்டோகிராஃப் போட்ட தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணிக்கு டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 5 முறை சாம்பியன் டைட்டில் வென்று கொடுத்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, முன்னாள் அணி வீரர்களுக்கு விருந்து கொடுப்பது முதல் நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் சுற்று பயணம் என்று ஓய்விறு பிறகான தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.
அதே நேரத்தில், தோனி, பயணங்களின் போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடமிருந்து அன்பை பரிமாறி வருகிறார். அப்படி ஒரு ரசிகர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, அவர் வாங்கிய புதிய சூப்பர் பைக்கிற்கு ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனி, ஹெட்லைட்டை தனது டிசர்ட்டால் நன்றாக துடைத்துவிட்டு, இங்கே, இந்த இடத்தில் ஆட்டோகிராஃப் போட்டுகிறேன் என்று எழுதி காண்பித்து, ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த சூப்பர் பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து, ரசிகருடன் போஸ் கொடுத்துள்ளார்.
தனது வீட்டில் பைக் மற்றும் கார்களை நிறுத்தி வைப்பதற்கு என்று தனியாக கேரேஜ் வைத்திருக்கும் தோனி, சூப்பர் பைக் உடன் போஸ் கொடுத்த காட்சி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரசிகருக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ 740ஐ சீரிஸ் காரின் ஹேண்ட்ரெஸ்டில் ஆட்டோகிராஃப் போடுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்வதும், பேனாவை தேர்வு செய்வதையும் காண முடிந்தது.