Asianet News TamilAsianet News Tamil

ஹர்திக் பாண்டியாவை வைத்து கேம் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் – குழப்பத்தில் ரசிகர்கள்!

டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொண்டு அதிர்ச்சி கொடுத்தது.

After Signed with Mumbai Indians, Hardik Pandya Retained by Gujarat Titans and GT withdraw its trade ahead of IPL Auction 2024, rsk
Author
First Published Nov 26, 2023, 6:02 PM IST | Last Updated Nov 26, 2023, 6:02 PM IST

ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் மூலமாக இறுதி பட்டியல் வெளியிடபட்டு வருகிறது. இதே போன்று டிரேட் முறையிலும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தங்களது வீரர்களை மாற்றி வருகிறது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கபட்டுள்ளது.

தமிழக வீரரை விடுவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் – 9 வீரர்களை விடுவித்து 14.5 கோடியை ஏலத்திற்கு வைத்துக் கொண்ட RR!

ஐபிஎல் டிரேட் முறை மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த 24 ஆம் தேதி குஜராத் அணியிலிருந்து விலகி மும்பை அணியில் இணைந்தார். ஆனால், அவர் இணைந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியே அவரை தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.

IPL Retention 2024: மணீஷ் பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான் உள்பட 11 வீரர்களை விடுவித்த டெல்லி கேபிடல்ஸ்!

இப்படி மும்பை மற்றும் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெற்று வருவது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றும், குஜராத் டைட்டன்ஸ் அணியானது குழப்பத்தில் இருக்கிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும், இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா எப்போ வேண்டுமானாலும் அதிக தொகைக்கு மற்றொரு அணிக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அது, மும்பை இந்தியன்ஸ் அணியாக கூட இருக்கலாம் என்று தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், ஜேமிசன் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்த சிஎஸ்கே – சென்னைக்கு கிடைத்த ரூ.32.1 கோடி!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios