டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து மணீஷ் பாண்டே, ரோவ்மன் பவல், பிலிப் சால்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான் உள்ளிட்ட 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2024 தொடரானது வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. 2024 ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீர்ரகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தின் மூலமாக இறுதி பட்டியல் வெளியிடபட்டு வருகிறது.

பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், ஜேமிசன் உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்த சிஎஸ்கே – சென்னைக்கு கிடைத்த ரூ.32.1 கோடி!

அதன்படி முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. டெல்லி அணியில் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் அடுத்த ஏலத்திற்கு ரூ.28.95 கோடியை கையில் வைத்துக் கொண்டது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

  • ரிலீ ரோஸோவ்
  • சேத்தன் சகாரியா
  • ரோவ்மன் பவல்
  • மணீஷ் பாண்டே
  • பிலிப் சால்ட்
  • முஷ்தாபிஜூர் ரஹ்மான்
  • கமலேஷ் நாகர்கோட்டி
  • ரிபல் படேல்
  • சர்ஃபராஸ் கான்
  • அமன் கான்
  • ப்ரியம் கார்க்

IPL Retention 2024: ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைனை தக்க வைத்துக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!