India vs South Africa ODI Series: நான் விளையாடமாட்டேன், எனக்கு ஓய்வு வேண்டும் – அடம் பிடிக்கும் விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடக்க இருக்கும் ஒயிட் பால் கிரிக்கெட்டான ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என்றும் அவருக்கு ஓய்வு வேண்டும் என்றும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.Kohli Test
Virat Kohli
இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில், இந்தியா 2-1 என்று முன்னிலையில் உள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி 4ஆவது டி20 போட்டி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த தொடரைத் தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது.
ICC Cricket World Cup 2023

இந்த நிலையில், தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாக விராட் கோலி கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறமாட்டார். மேலும், அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ODI World Cup 2023
பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு அதிகாரிகளிடம் தனக்கு ஒயிட்பால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு தேவை என்றும், எப்போது ஒயிட்பால் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேனோ அப்போது வருவதாகவும் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறுவார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
Virat Kohli Test Cricket
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 50ஆவது சதம் உள்பட ஏராளமான சாதனைகளை படைத்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் மொத்தமாக 765 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக தொடர் நாயகன் விருது பெற்றார்.