IPL 2023: 31ல் 9 முறை தோற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; இந்த முறை மும்பைக்கு பதிலடி கொடுக்குமா?
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இதுவரையில் நடந்த 31 போட்டிகளில் 9 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளும் இதற்கு முன்னதாக 31 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரையில் நடந்த 103 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 48 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2ஆவது ஆடிய அணி 55 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் ஆர்சிபி அணி அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளது. இங்கு கேகேஆர் குறைந்த ஸ்கோராக 67 ரன்கள் எடுத்துள்ளது. டிவிலியர்ஸ் அதிகபட்சமாக 133 (நாட் அவுட்) ரன்கள் குவித்துள்ளார். மும்பை வீரர் லஷித் மலிங்கா இங்கு அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
IPL 2023: ஓவரா ஆட்டம் போட்ட விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற சவுரவ் கங்குலி; வைரலாகும் வீடியோ!
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 71 போட்டிகளில் விளையாடி 43 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதில், 27 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இதுவே கொல்கத்தா விளையாடிய 23 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
மைதானம் எப்படி?
மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக மும்பையில் நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
IPL 2023: 5 போட்டியில் தோற்றால் என்ன, நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு போவோம்: டேவிட் வார்னர் நம்பிக்கை!