Asianet News TamilAsianet News Tamil

கேட்ச் பிடிக்க டைவ் அடித்த மெஹிடி: பஞ்சரான மூக்கு!

ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயற்சித்த வங்கதேச அணியின் மெஹிடி ஹசன் மூக்கில் காயம் ஏற்பட்ட நிலையில், வெளியில் சென்றார்.

Mehidy Hasan Miraz wounds his nose after trying to Shreys Iyer catch
Author
First Published Dec 23, 2022, 1:12 PM IST

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாகாவில் தற்போது நடந்து வருகிறது.

டெஸ்ட் அரங்கில் 7000 ரன்களை கடந்த புஜாரா!

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, தொடங்கிய 2 ஆம் நாளில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்: ரன் அவுட்டிலிருந்து தப்பிய விராட் கோலி - இந்திய அணி நிதான ஆட்டம்!

டஸ்கின் அகமது வீசிய ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் பந்தை ஆஃப் சைடு அடிக்க, ஆஃப் சைடு கவரில் நின்றிய மெஹிடி பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது மூக்கில் அடிபட்ட நிலையில், அப்படியே மூக்கை பிடித்துக் கொண்டே வெளியே சென்றுவிட்டார். வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் ஷ்ரேயாஸ் ஐயஸ் இறங்கி அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்தை தவறவிடவே, விக்கெட் கீப்பர் கைக்கு சென்றும், ஸ்டம்பிங்கிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் தப்பித்துவிட்டார். மூக்கு காயம் காரணமாக வெளியில் சென்ற மெஹிடி 50ஆவது ஓவரில் திரும்ப வந்தார்.

IPL auction 2023: தோனி முதல் இஷான் கிஷான் வரை - அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள் யார் யார்?

Follow Us:
Download App:
  • android
  • ios