வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் புஜாரா 3 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் அரங்கில் அவர் 7000 ரன்களை கடந்தார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையில் தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஆடி 227 ரன்கள் சேர்த்தது. இதில், மோமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட் கைப்பற்றினார்.

டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்: ரன் அவுட்டிலிருந்து தப்பிய விராட் கோலி - இந்திய அணி நிதான ஆட்டம்!

பின்னர் ஆடிய இந்திய அணியில் கே எல் ராகுல் 10 ரன்னிலும், சுப்மன் கில் 20 ரன்னிலும் ஆட்டழமிழந்தனர். பின்னர் வந்த புஜாரா - விராட் கோலி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா 3 ரன்கள் சேர்த்திருந்த போது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்களை கடந்தார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட புஜாரா 24 ரன்கள் எடுத்திருந்த போது டைஜுல் இஸ்லாம் பந்து வீச்சில் மோமினுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

IPL auction 2023: தோனி முதல் இஷான் கிஷான் வரை - அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள் யார் யார்?

என்னதான் கடினமான கேட்சாக இருந்தாலும், அதனை மிகவும் லாபகரமாக பிடித்துள்ளார். 42 ஓவர்கள் முடிவில் இந்திய 113 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்துள்ளது. உணவு இடைவேளையின் போதே விராட் கோலி ரன் அவுட்டில் வெளியேற வேண்டியது. மறுபடியும் ஓடி தப்பித்துவிட்டார். உணவு இடைவேளைக்கு பிறகு வந்து 24 ரன்களில் டஸ்கின் பந்தில் வெளியேறினார்.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!