ஒரு நாள் போட்டிகளில் ஒரு கேப்டனாக கேஎல் ராகுல் படைத்த சாதனைகள் என்னென்ன?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. இதில் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றினார். இந்த நிலையில், தான் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக செயல்படுகிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இதுவரையில் விளையாடிய 146 போட்டிகளில் இந்தியா 54 போட்டிகளில் வெற்றியும், ஆஸ்திரேலியா 82 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கேஎல் ராகுல் இதற்கு முன்னதாக 7 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில், 4 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார்.
கேஎல் ராகுல் கேப்டனாக ஒருநாள் போட்டி வெற்றி, தோல்விகள்:
தென் ஆப்பிரிக்கா – 31 ரன்களில் தோல்வி – 2022 – பார்ல்
தென் ஆப்பிரிக்கா – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி – 2022 – பார்ல்
தென் ஆப்பிரிக்கா – 4 ரன்களில் தோல்வி – 2022 – கேப் டவுன்
ஜிம்பாப்வே – 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – 2022 – ஹராரே
ஜிம்பாப்வே – 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – 2022 – ஹராரே
ஜிம்பாப்வே – 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – 2022 – ஹராரே
வங்கதேச – 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – 2022 – சட்டோகிராம்
வங்கதேசத்திற்கு எதிராக நடந்த இந்தப் போட்டியில் தான் இஷான் கிஷான் 210 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தப் போட்டியில் இஷான் கிஷான், 131 பந்துகளில் 24 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உள்பட 210 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!
கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகள் – கேப்டன், பிளேயர்:
கேப்டனாக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 6 இன்னிங்ஸ்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 68 மட்டுமே ஆகும். இதே போன்று ஒரு பிளேயராக 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 56 இன்னிங்ஸ்களில் 1645 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 112 ரன்கள் எடுத்தார்.
இதே போன்று 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில், 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளார். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலமாக 8ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார்.