இது ஆர்சிபி ஏரியா – 32ல் 18ல் வெற்றி, கேகேஆருக்கு சாதமான பெங்களூரு!

இதுவரையில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலாக நடந்த 32 போட்டிகளில் கேகேஆர் அணி தான் 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

KKR won 18 IPL Matches against RCB, in Bengaluru, it won 4 out of 5 matches in IPL rsk

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் புதிதாக ஒரு டிரெண்ட் உருவாகி வருகிறது. இதுவரையில் நடந்த 9 ஐபிஎல் போட்டிகளிலும் அந்தந்த ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2024 முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 9ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இது பெங்களூரு கோட்டை – இங்கு ரஸலால் ஒன்னுமே செய்ய முடியாதா? டிரெண்டை மாற்றுமா கேகேஆர்?

இந்த நிலையில் தான் இன்று பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் 10ஆவது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக இந்த சீசனில் ஆர்சிபி விளையாடிய 2 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருகிறது. சென்னையில் நடந்த போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், பெங்களூருவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே ஒரு போட்டியால வந்த வினை: மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்கட்சி பூசல், மலிங்கா – ஹர்திக் மோதல்?

இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, கொல்கத்தாவின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் 3ஆவது ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் ரிங்கு சிங்குவைவிட ஆண்ட்ரூ ரஸல் சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியானது 208 ரன்கள் குவித்தது. ஆனால், பெங்களூரு அணிக்கு எதிராக ரஸலால் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பெங்களூரு அணியில் முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசஃப், கேமரூன் க்ரீன் என்று வேகப்பந்து வீச்சாளர்களும், கிளென் மேக்ஸ்வெல், கரண் சர்மா, மாயங்க் டாகர் என்று ஸ்பின்னர்களும் இருக்கின்றனர்.

அஸ்வினுக்கு 5ஆவது இடமா? ஒரே ஓவரில் 2 சிக்ஸர், ஜெய்ப்பூரில் அனல் பறக்க வைத்த தமிழக வீரர்!

ஆனால், இன்று பெங்களூருவில் கொல்கத்தா 2ஆவது போட்டியில் விளையாடும் நிலையில் இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கொல்கத்தா வெற்றி பெற வேண்டுமானால், பீல்டிங்கிலும், பேட்டிங்கில், பவுலிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒரு கேட்ச் வாய்ப்பையும் தவற விட கூடாது. அப்படி செய்தால், ஐபிஎல் டிரெண்டை மாற்றிய அணி என்ற சாதனையை கொல்கத்தா படைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இதுவரையில் இரு அணிகளும் 32 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா 18 போட்டியிலும், பெங்களூரு 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் நியூ டிரெண்ட் – ஒரு நிமிஷத்துல ஷாக் கொடுத்த ஸ்டப்ஸ் – போராடி தோற்ற டெல்லி கேபிடல்ஸ்!

பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் நடந்த போட்டி- RCB vs KKR..

மொத்த போட்டிகள் – 11

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 4 வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 11 வெற்றி

RCB vs KKR – அதிக ரன்கள்:

விராட் கோலி (RCB) – 861 ரன்கள்

அதிகபட்ச ஸ்கோர் (RCB) – கிறிஸ் கெயில் (102* ரன்கள்)

கவுதம் காம்பீர் (KKR) -530 ரன்கள்

அதிகபட்ச ஸ்கோர் (KKR) – பிராண்டன் மெக்கல்லம் (158* ரன்கள்)

RCB vs KKR – அதிக விக்கெட்டுகள்:

யுஸ்வேந்திர சகால் (RCB) -19 விக்கெட்டுகள்

சிறந்த பவுலிங் (RCB) – வணிந்து ஹசரங்கா – 4/20

சுனில் நரைன் (KKR) – 23 விக்கெட்டுகள்

வருண் சக்கரவர்த்தி (KKR) – 4/15

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios