Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு போட்டியால வந்த வினை: மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்கட்சி பூசல், மலிங்கா – ஹர்திக் மோதல்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பவுலிங் கோச் மலிங்கா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Lasith Malinga and Hardik Pandya clash after SRH vs MI in 8th IPL 2024 Match at Hyderabad? rsk
Author
First Published Mar 29, 2024, 1:48 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஹர்திக் பாண்டியாவின் செயல் அணியில் உள்ள பயிற்சியாளர் உள்பட யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அஸ்வினுக்கு 5ஆவது இடமா? ஒரே ஓவரில் 2 சிக்ஸர், ஜெய்ப்பூரில் அனல் பறக்க வைத்த தமிழக வீரர்!

கடந்த 8ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 34 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் உள்பட 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் நியூ டிரெண்ட் – ஒரு நிமிஷத்துல ஷாக் கொடுத்த ஸ்டப்ஸ் – போராடி தோற்ற டெல்லி கேபிடல்ஸ்!

இதில், ஹைதராபாத் அணி விளையாடுவதைப் பார்த்து தன்னால் கேப்டன்ஷி செய்ய முடியாத நிலையில் ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியா பவுண்டரி லைனுக்கு ஓடினார். மேலும், பவுலிங் பயிற்சியாளரான மலிங்காவிற்கும், பாண்டியாவின் கேப்டன்ஸி விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மலிங்கா, கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைக்க முயற்சித்தார். ஆனால், ஹர்திக் பாண்டியா அவரை கண்டு கொள்ளாமல் அப்படியே நழுவிச் செல்வது போன்ற வீடியோ காட்சி வெளியானது.

டெல்லி அணிக்காக 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ரிஷப் பண்ட்!

இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பிரச்சனைகள் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் இப்போது ரசிகர்களை வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உள்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. இது அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா ரசிகர்கள் முதல் போட்டியின் போது சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வைரலானது. இந்த பிரச்சனை காரணமாக ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் உள்பட் அனைவரும் கூறி வருகின்றனர்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios