தன்னிடமிருந்த வெற்றியை தாரை வார்த்து கொடுத்த ஹைதராபாத்; லட்டு மாதிரி வாங்கிச் சென்ற கொல்கத்தா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

KKR beat SRH by 5 Runs Difference in 47th IPL Match at Hyderabad

நேற்று ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 47ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று கேகேஆர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 20 ரன்களுக்கு வெளியேறினார். வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்களூக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

மழையால் வந்த ஆபத்து: சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் புதிய சிக்கல்!

அதன்பின்னர் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 31 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் நிதிஷ் ராணா. அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 35 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஆண்ட்ரே ரசல் 15 பந்தில் 24 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

200ஆவது ஐபிஎல் போட்டியில் டக் அவுட்: 15 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா!

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், மாயங்க் அகர்வால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு வந்த ராகுல் த்ரிபாதி கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்த சீசனில் சதம் அடித்த ஹாரி ப்ரூக் களமிறங்கினார். ஆனால், அவர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேப்டன் எய்டன் மார்க்ரம் போராடி 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் கிளாசென் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ஒரு ரன்னாக எடுத்தால் கூட எளிதாக ஹைதராபாத் வெற்றி பெற்றிருக்கலாம். தன்னிடம் இருந்த வெற்றியை கொல்கத்தாவிற்கு தாரைவார்த்து கொடுத்தத்து தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றான் ஒற்றிப் பிறந்த இரட்டையர்கள் போன்று போஸ் கொடுத்த ரோகித் சர்மா - ஷிகர் தவான்!

வருண் சக்கரவர்த்தி 16ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அவர் 4 ரன் மட்டுமே கொடுத்தார். 18ஆவது ஓவரையும் அவர் தான் வீசினார். அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார். இறுதியில் மழை தூரல் வேறு விழுந்து கொண்டிருந்தது. இதனால் டக் ஒர்த் லீவிஸ் முறை என்றால் ஹைதராபாத் அணிக்கு ஒரு ரன் தேவை. ஆனால், அப்படி மழை ஒன்றும் பெரிதாக இல்லை என்றதால் போட்டி தொடர்ந்து நடந்தது. 19ஆவது ஓவரில் 12 ரன்கள் கொடுக்கப்பட்ட நிலையில் கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

யாரை போட வைக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டிருந்த போது நான் வீசுகிறேன். என்னிடம் பந்தை கொடு என்று கேட்டு வாங்கி வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். அவரது தைரியம், தன்னம்பிக்கைக்கு உரிய பதிலும் கிடைத்தது. அதன்படி, முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவ பந்தில் எக்ஸ்டிரா மூலமாக ஒரு ரன் கிடைத்தது. 3ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் மாயங்க் மார்க்கண்டே ரன் ஏதும் எடுக்காத நிலையில், 5ஆவது பந்தில் ஒரு எடுக்க, கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக ரத்தான போட்டி: இரு அணிகளுக்கும் புள்ளி; ரசிகர்கள் ஏமாற்றம்!

இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 8ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக கடைசி வந்து சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றி பெற செய்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios