மழையால் வந்த ஆபத்து: சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் புதிய சிக்கல்!
லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி மழை குறுக்கீடு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் லக்னோவிற்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணியின் வீரர்கள், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் மொயீன் அலி, தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது ஓவர்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் இந்த எளிய இலக்கை சிஎஸ்கே அணி அடைந்து 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளில் முதலிடம் பிடித்திருக்கும். தற்போது மழையால் சிஎஸ்கே அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 11 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி 3ஆவது இடம் பிடித்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
இன்னும் சிஎஸ்கே அணிக்கு 4 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் எஞ்சிய போட்டிகளில் சிஎஸ்கே அணி ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் 16 முதல் 18 புள்ளிகள் தேவைப்படும்.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிக்கு முதல் குவாலிஃபையர் சுற்றில் தோற்றால், 2ஆவது வாய்ப்பு வழங்கப்படும். 10 போட்டிகள் முடிந்த நிலையில் லக்னோ அணி 11 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
அதிக ரன் ரேட்டும் பெற்றுள்ளது. தற்போது சிஎஸ்கே அணி அதிக புள்ளிகள் பெற வேண்டுமென்றால் எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அந்த 4 போட்டிகள் எந்தெந்த அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
இதில் கடைசி போட்டி மட்டும் டெல்லியில் நடக்கிறது. மற்ற 3 போட்டிகளுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஆனால், ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
ஆதலால், இந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகள் கிடைக்கும். அதன்படி புள்ளிப்பட்டியலில் மொத்தமாஅ 19 புள்ளிகளுடன் சென்னை முதலிடம் பிடிக்கும். ஒருவேளை இதில், 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் பெற்று 17 புள்ளிகளுடன் பட்டியலில் இடம் பிடித்திருக்கும்.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
இதுவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகள் பெறும். இதனால், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். ஒருவேளை புள்ளிப்பட்டியலில் சென்னைக்கு கீழ் உள்ள அணிகள் எல்லாம் தோல்வியை தழுவினால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரிக்கும்.
சென்னை சுப்பர் கிங்ஸ் - பிளே ஆஃப்
ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகள்ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4ஆவது, 5ஆவது மற்றும் 6ஆவது இடங்களை பிடித்துள்ளன. இந்த அணிகள் எஞ்சிய போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.