200ஆவது ஐபிஎல் போட்டியில் டக் அவுட்: 15 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

MI Skipper Rohit Sharma has a record of being ducked out 15 times in IPL History

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 46ஆவது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். கடைசியாக 53 பந்துகளில் 119 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தனர்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்: மொஹாலியில் வான வேடிக்கை காட்டிய பஞ்சாப் 214 ரன்கள் குவிப்பு!

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போன்று ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிஷி தவான் முதல் ஓவர் வீசினார். இதில், 3ஆவது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் ரோகித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மாற்றான் ஒற்றிப் பிறந்த இரட்டையர்கள் போன்று போஸ் கொடுத்த ரோகித் சர்மா - ஷிகர் தவான்!

அதுமட்டுமின்றி இதன் மூலமாக அதிக முறை டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியலில் ரோகித்  சர்மாவும் இடம் பிடித்துள்ளார். இதுவரையில் ஆடிய ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா 15 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதற்கு முன்னதாக 15 முறை அவுட்டானவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், மந்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக ரத்தான போட்டி: இரு அணிகளுக்கும் புள்ளி; ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்த சீசனில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா மொத்தமாக 184 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்துள்ளார். இதே ஃபார்மில் அடுத்து வர இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கினால் இந்திய அணிக்கு தான் சிக்கலாக இருக்கும்.
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios