IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் நாளை நடக்கும் 2வது போட்டியில் மோதும் பஞ்சாப் கிங்ஸ் - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 16வது சீசன் இன்று தொடங்கியது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் சீசனின் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
நாளை சனிக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு மொஹாலியில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மணிக்கு தொடங்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
நாளை பிற்பகல் நடக்கும் போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சா, சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ரிஷி தவான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி
உத்தேச கேகேஆர் அணி:
நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.