Asianet News TamilAsianet News Tamil

காட்டடி காட்டிய பெர்ரேரா - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Joburg Super Kings Won by 16 runs against Durban Super Giants in SA20 2nd Match
Author
First Published Jan 12, 2023, 11:33 AM IST

தென்னாப்பிக்காவில் டி20 லீக் தொடர் தொங்கி நடந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் கலந்து கொண்டுள்ளன. முதல் போட்டியில் எம் ஐ கேப்டவுன் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2ஆவது டி20 போட்டியில்  டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பளிக்கப்படுமா?

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் டீம்:

குயிண்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹென்றிச் கிளாசன், வியான் முல்டர், கலே மாயர்ஸ், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், கேமா பால், மேத்யூ பிரீட்ஸ்கி, பிரெனெலன் சுப்ராயன், அகிலா தனஞ்செயா

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் டீம்:

பாப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ரீசா ஹென்றிக்ஸ், ஜென்மென் மலான், லெவிஸ் க்ரெகோரி, கைல் வெர்ரென்னி (விக்கெட் கீப்பர்), ரோமாரியோ ஷெப்பர்ட், மலூசி சிபோடோ, ஜார்ஜ் ஹார்டன், அல்சாரி ஜோசப், ஆரோன் பான்சிகோ, டோனவொன் பெர்ரேரா

SA20: முதல் போட்டியிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம் ஐ கேப்டவுன்!

அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்கள் மலான் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். எனினும், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து கேப்டன் டூ பிளசிஸ் 39 ரன்களிலும், விக்கெட் கீப்பர் வெர்ரேன்னி 10 ரன்னிலும், க்ரேகோரி 2 ரன்னிலும் ஆட்டமிழக்க 13.6 ஓவர்களில் ஜோபர்க் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பெர்ரேரா, ஷெப்பர்ட் இருவரும் ஜோடி சேர்ந்து டர்பன் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

மும்பை 687 எடுத்து டிக்ளேர் - சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்த பிரித்வி ஷா 379 ரன்கள்!

ஷெப்பர்ட் 40 ரன்னில் ஆட்டமிழக்க, பெர்ரேரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 40 பந்துகளில் 5 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 80 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஜோபர்க் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் டர்பன் அணி சார்பில் சுப்ராயன் 2 விக்கெட்டுகளும், மஹாராஜ், பிரிட்டோரியஸ், தனஞ்செயா, ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய டர்பன் அணிக்கு மாயர்ஸ் மற்றும் கேப்டன் குயிண்டன் டி காக் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. இருவரும் அவுட்டான பிறகு மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் ஜோபர்ஸ் கிங்ஸ் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டும், ஆரோன் பான்சிசோ, பெர்ரேரா, சிபோடோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!

இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் ஜோபர்க் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பெர்ரேரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் 3ஆவது எஸ்ஏ20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios