SA20: முதல் போட்டியிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம் ஐ கேப்டவுன்!
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் முதல் போட்டியில் MI கேப்டவுன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் பிப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. நேற்று கேப்டவுனில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு சொந்தமான அணியான எம்.ஐ கேப்டவுன் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சொந்தமான பார்ல் ராயல்ஸ் அணியும் மோதின.
மும்பை 687 எடுத்து டிக்ளேர் - சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்த பிரித்வி ஷா 379 ரன்கள்!
கேப்டவுனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணியின் கேப்டனான ரஷீத் கான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். மில்லர் 42 ரன்களில் ஆட்டமிழக்க மறற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!
எளிய இலக்கை துரத்திய எம் ஐ கேப்டவுன் அணியில் தொடக்க வீரர் டிவால்ட் பிரெவிஸ் அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரியான் ரிக்கெல்டன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். சாம் கரண் 20 ரன்களிலும், ராசி வாண்டர்டசன் 8 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் 15.3 ஓவகளில் எம் ஐ கேப்டவுன் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் 70 ரன்கள் குவித்த டிவால்ட் பிரெவிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!
எம்.ஐ கேப்டவுன் அணி:
ராசி வாண்டர்டசன், கிராண்ட் ராயலோஃப்சென் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், ரியான் ரிக்கெல்டன், டெலானோ பாட்ஜியடெர், ஜார்ஜ் லிண்டே, சாம் கரன், ரஷீத் கான் (கேப்டன்), டுவான் யான்சென், ஆலி ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
புத்தாண்டை சிறப்பாக தொடங்கிய கோலியை பாராட்டிய சிராஜ், சகால்!
பார்ல் ராயல்ஸ் அணி:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), விஹான் லுப்பே, இயன் மோர்கன், டேவிட் மில்லர் (கேப்டன்), டேன் விலாஸ், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், ஃபார்ச்சூன், ரமான் சிம்மண்ட்ஸ், கோடி யூசுஃப், டப்ரைஸ் ஷம்ஸி.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 9 மணிக்கு டர்பன் நகரில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.