Asianet News TamilAsianet News Tamil

இவங்க ரெண்டு பேரும் அப்போது நம்பர் 1, நம்பர் 2 ஆனால், இப்போது இல்லை!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையில் ரோகித் சர்மா நம்பர் 1 இடமும், விராட் கோலி நம்பர் 2 இடமும் பிடித்திருந்தனர்.

In 2019 Rohit Sharma and Virat Kohli at first 2 places in ICC Men ODI Ranking list But now they are in 8th and 6th places
Author
First Published Jan 11, 2023, 12:51 PM IST

இந்தியா வந்துள்ள இலங்கை அணி தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. ஆனால், 400 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். கடைசி நேரத்தில் விக்கெட் விழ இந்திய அணி 373 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

இதையடுத்து 374 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணி களமிறங்கியது. இதில், பதும் நிசாங்கா 72 ரன்களும், கேப்டன் தசுன் ஷனாகா 108 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போன்று தான் கடந்த டி20 தொடரின் 2 ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புத்தாண்டை சிறப்பாக தொடங்கிய கோலியை பாராட்டிய சிராஜ், சகால்!

இதனை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்தால், வெற்றி பெறுகிறது. அதுவே டாஸ் வென்ற அணி பந்து வீச்சு தேர்வு செய்தால், அந்த அணி தோல்வியை தழுவுகிறது என்பதை இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி முதல் முதல் ஒரு நாள் போட்டி வரையில் நடந்தவற்றை வைத்து தீர்மானிக்க முடிகிறது.

சச்சினின் சதம் சாதனையை முறியடித்த கிங் கோலி!

இது ஒரு புறம் இருக்க ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கடந்த 2019 ஆம் ஆண்டுகளில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 இடம் பிடித்திருந்தனர். ஆனால், இப்பொழுது விராட் கோலி ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் 6ஆவது இடமும், ரோகித் சர்மா 8 ஆவது இடமும் பிடித்துள்ளனர். தற்போது பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் நம்பர் 1 இடமும், இமாம் உல் ஹாக் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரசிவ் வாண்டெர் டூசென் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

IND vs SL: தசுன் ஷனாகாவின் போராட்ட சதம் வீண்..! முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Follow Us:
Download App:
  • android
  • ios