Asianet News TamilAsianet News Tamil

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

Records created by Rohit Sharma and Virat Kohli in the first ODI Against Sri Lanka
Author
First Published Jan 11, 2023, 9:47 AM IST

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா கடைசி நேரத்திலிருந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

IND vs SL: தசுன் ஷனாகாவின் போராட்ட சதம் வீண்..! முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்தது. இதில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். சுப்மன் கில் 60 பந்துகளில் 11 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஒருபுறம் தனது வானவேடிக்கையை காட்டி வந்த ரோகித் சர்மா 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தனது 47 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் நேற்று இறந்த தனது நாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வானத்தைப் பார்த்துவாறு பேட்டை உயர்த்தி காட்டினார். இறுதியாக 67 பந்துகளில் 3 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ODI-யில் 45வது சதமடித்து சாதனை படைத்த கோலி! மெகா ஸ்கோர் அடித்து இலங்கைக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

பின்னர் விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை திணற வைத்தனர். அதிரடியாக ஆடிய விராட் கோலி 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது கோலி கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் நழுவவிட்டார். இது அவருக்கு சாதகமாக அமைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்னிலும், கே எல் ராகுல் 39 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 80 பந்துகளில் தனது 45 ஆவது சதத்தை நிறைவு செய்தார். இறுதியாக கோலி 87 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகள் உள்பட 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 400 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

இதையடுத்து 374 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணியில் பதும் நிசாங்கா 72 ரன்களும், கேப்டன் தசுன் ஷனாகா 108 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கேட்சுகளையும் தவறவிட்டுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 9500 ரன்களை கடந்துள்ளார். புத்தாண்டு தொடக்கத்தில் தனது 47ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி:

ஒரு அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த சதங்கள்:

வெஸ்ட் அணிக்கு எதிராக - 9 சதங்கள்
இலங்கை அணிக்கு எதிராக - 9 சதங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 8 சதங்கள்

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 8 சதங்கள் அடித்துள்ளார். இதே போன்று சச்சின் டெண்டுல்கரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 9 சதங்களும், இலங்கை அணிக்கு எதிராக 8 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் முதுகுவலி.. இந்தியாவிற்கு தலைவலி..! நியூசி., & ஆஸி., தொடரிலிருந்தும் விலகுகிறார் பும்ரா

ஒரு நாட்டில் அதிக முறை சதங்கள் அடித்தவர்கள்:

இந்தியாவில் நடந்த 99 போட்டிகளில் விராட் கோலி 20 சதம் அடித்துள்ளார். 160 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதம் அடித்துள்ளார். இதே போன்று தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா 69 போட்டிகளில் 14 சதங்களும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 151 போட்டிகளில் 14 சதங்களும் அடித்துள்ளனர்.

விராட் கோலி - 20 சதம் (99 போட்டி)

சச்சின் டெண்டுல்கர் - 20 சதம் (160 போட்டி)

ஹசீம் ஆம்லா - 14 சதம் (69 போட்டி)

ரிக்கி பாண்டிங் - 14 சதம் (151 போட்டி)

என் கிரிக்கெட் கெரியரில் என்னை அச்சுறுத்திய 2பவுலர்கள் இவங்கதான்; ஒருவர் இந்தியர்! ஃபாஃப் டுப்ளெசிஸ் ஓபன் டாக்

ஒரு அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் எத்தனை முறை ஒரு அணி எடுத்துள்ளது?

இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டிகளில் 28 முறை ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 22 முறை 300 ரன்களுக்கு மேல் இந்தியா குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் 21 முறை இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 18 முறை இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FIH Hockey World Cup 2023: ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா படைத்த தங்கப் பதக்க சாதனை!

விராட் கோலில் ஒரு நாள் போட்டி ரன்கள்:

இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி 2264 ரன்கள் எடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலில் 2261 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி 2083 ரன்கள் எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி 1403 ரன்கள் சேர்த்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios