என் கிரிக்கெட் கெரியரில் என்னை அச்சுறுத்திய 2பவுலர்கள் இவங்கதான்; ஒருவர் இந்தியர்! ஃபாஃப் டுப்ளெசிஸ் ஓபன் டாக்

தனது கிரிக்கெட் கெரியரில் தன்னை அச்சுறுத்திய 2 பவுலர்கள் யார் யார் என்று ஃபாஃப் டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார்.
 

faf du plessis names 2 toughest bowlers he had faced in his cricket career

ஃபாஃப் டுப்ளெசிஸ் தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் இருந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் 69 டெஸ்ட், 143 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகள் என மொத்தம் 262 சர்வதேச போட்டிகளில் ஆடி 11,198 ரன்களை குவித்துள்ளார் ஃபாஃப் டுப்ளெசிஸ்.

விவியன், சச்சின், ஏபிடி-னு எத்தனையோ பேரை பார்த்துருக்கேன்! சூர்யகுமார் மாதிரி வீரரை பார்த்ததில்ல - கபில் தேவ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தவிர, ஐபிஎல், பிக்பேஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என பல வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலும் ஆடி ஏகப்பட்ட ரன்களை குவித்தவர் ஃபாஃப் டுப்ளெசிஸ். ஐபிஎல்லில் 2011லிருந்து 2015 வரை ஆடிய ஃபாஃப், அதன்பின்னர் மீண்டும் 2018லிருந்து 2021ம் ஆண்டுவரை ஆடினார். 2022ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடும் ஃபாஃப், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறார்.

சூர்யகுமார் மட்டும் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், காணாமல் போயிருப்பார்..! PCB-க்கு குட்டு வைத்த சல்மான் பட்

தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டிலிருந்து நடக்கவுள்ள எஸ்.ஏ டி20 லீக்கில், சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ள ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆடுகிறார் ஃபாஃப். ஜனவரி 10(நாளை) முதல் தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடங்கவுள்ள நிலையில், கிரிக் இன்ஃபோவிற்கு பேட்டியளித்த ஃபாஃப் டுப்ளெசிஸ், தனது கெரியரில் தான் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா, சின்ன வயசுல என் பேட்டிங்கை பார்த்தது இல்லைனு நினைக்கிறேன்! தன்னைத்தானே கலாய்த்து காமெடி செய்த டிராவிட்

இதுகுறித்து பேசிய ஃபாஃப் டுப்ளெசிஸ், சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தான் நான் எதிர்கொண்டதில் எனக்கு சவாலாகவும் கடினமாகவும் இருந்த 2 பவுலர்கள் என்று தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios