சூர்யா, சின்ன வயசுல என் பேட்டிங்கை பார்த்தது இல்லைனு நினைக்கிறேன்! தன்னைத்தானே கலாய்த்து காமெடி செய்த டிராவிட்
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றதற்கு பின் சூர்யகுமார் யாதவை ராகுல் டிராவிட் நேர்காணல் செய்தபோது, தன்னைத்தானே கலாய்த்து ராகுல் டிராவிட் பேசிய வீடியோ செம வைரலாகிவருகீறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் டிவில்லியர்ஸுக்கு பின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வெல்ல கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய நிலையில், அதிரடியாக பேட்டிங் ஆடி 45 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 112 ரன்களை குவித்து இந்திய அணி 20 ஓவரில் 228 ரன்களை குவிக்க உதவினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 2 சதங்களை விளாசியிருந்த சூர்யகுமார் யாதவ், 3வது சதத்தை இலங்கைக்கு எதிராக விளாசினார்.
ரோஹித் சர்மா கேப்டன்சிக்கே தகுதியில்லாத வீரர்..! கபில் தேவ் கடும் விமர்சனம்
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2வது இடத்தில் உள்ளார் சூர்யகுமார் யாதவ். விரைவில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார்.
இலங்கைக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆடிய விதம் பார்வையாளர்களின் கண்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா, இலங்கை அணி வீரர்கள், நிர்வாகத்திற்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் 9 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
அந்த போட்டிக்கு பின், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்யகுமார் யாதவை நேர்காணல் செய்தார். அப்போது சூர்யகுமார் யாதவை அறிமுகம் செய்தபோது, “இப்போது என்னுடன் இங்கு இருக்கும் வீரர், அவர் சிறு வயதில் வளர்ந்துவந்தபோது எனது பேட்டிங்கை பார்த்திருக்கமாட்டார் என நினைக்கிறேன். கண்டிப்பாக பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.. உண்மை தானே..? என்று தன்னைத்தானே கலாய்க்கும் விதமாக நகைச்சுவையாக சூர்யகுமார் யாதவிடம் கேட்டார் ராகுல் டிராவிட்.
வைடு கொடுக்காத அம்பயரை கோபத்தில் கடுமையாக திட்டிய ஷகிப் அல் ஹசன்..! வைரல் வீடியோ
அதற்கு, நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார் சூர்யகுமார் யாதவ். இதையடுத்து சூர்யகுமார் யாதவிடம் பேசிய ராகுல் டிராவிட், சூர்யகுமார் யாதவ் தனித்துவமான வீரர். ஒவ்வொரு முறை நீங்கள்(சூர்யகுமார்) சிறந்த இன்னிங்ஸை ஆடும்போதும், அதுதான் சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்க முடியவில்லை. ஏனெனில் அடுத்தடுத்து அதைவிட சிறந்த இன்னிங்ஸை ஆடிவிடுகிறீர்கள். உங்கள் பேட்டிங்கை பார்க்க பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்த இன்னிங்ஸ் எது..? என்று சூர்யகுமாரிடம் கேட்டார் ராகுல் டிராவிட்.
அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், கடினமான சூழல்களில் பேட்டிங் ஆட எனக்கு பிடித்திருக்கிறது. என்னால் ஒரு இன்னிங்ஸை குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனது அனைத்து இன்னிங்ஸ்களையும் நான் என்ஜாய் செய்கிறேன். முடிந்தளவு மகிழ்ச்சியுடன் பேட்டிங் ஆட நினைக்கிறேன். கடினமான சூழல்களில் எதிரணிகளின் கை ஓங்கும்போது, அதை சவாலாக எடுத்து நமது அணியை நல்ல நிலைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறேன். எனக்கும் அணிக்கும் அது நல்ல முடிவை தந்தால் அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றார் சூர்யகுமார் யாதவ்.