ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது 100 சதவிகித உடல் தகுதியுடன் தேர்ச்சி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலமாக அணிக்கு திரும்ப வருகிறார்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 6 மாத காலத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்ற பும்ரா திருவனந்தபுரத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
ரஞ்சி டிராபியுடன் ஓய்வு அறிவிக்க மனோஜ் திவாரி திட்டம்!
இந்த நிலையில், நீண்ட கால ஓய்விற்குப் பிறகு பும்ரா 100 சதவிகித முழு உடல் தகுதியுடன் திரும்ப வருகிறார். ஆம், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் மூலமாக பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.
இந்த தொடரைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா - இலங்கை போட்டி தொடர் 2023:
ஜனவரி 3 - முதல் டி20 - மும்பை
ஜனவரி 5 - 2ஆவது டி20 - புனே
ஜனவரி 7 - 3ஆவது டி20 - ராஜ்கோட்
ஜனவரி 10 - முதல் ஒருநாள் போட்டி - கவுஹாத்தி
ஜனவரி 12 - 2ஆவது ஒருநாள் போட்டி - கொல்கத்தா
ஜனவரி 15 - 3ஆவது ஒருநாள் போட்டி - திருவனந்தபுரம்
இந்தியா - நியூசிலாந்து:
ஜனவரி 18 - முதல் ஒருநாள் போட்டி - ஹைதராபாத்
ஜனவரி 21 - 2ஆவது ஒருநாள் போட்டி - ராய்பூர்
ஜனவரி 24 - 3ஆவது ஒருநாள் போட்டி - இந்தூர்
ஜனவரி 27 - முதல் டி20 - ராஞ்சி
ஜனவரி 29 - 2ஆவது டி20 - லக்னோ
பிப்ரவரி 1 - 3ஆவது டி20 - அகமதாபாத்
இந்தியா - ஆஸ்திரேலியா:
பிப்ரவரி 9-13 - முதல் டெஸ்ட் - நாக்பூர்
பிப்ரவரி 17-21 - 2ஆவது டெஸ்ட் - டெல்லி
மார்ச் 1-5 - 3ஆவது டெஸ்ட் - தர்மசாலா
மார்ச் 9-13 - 4ஆவது டெஸ்ட் - அகமதாபாத்
மார்ச் 17 - முதல் ஒருநாள் போட்டி - மும்பை
மார்ச் 19 - 2ஆவது ஒருநாள் போட்டி - விசாகப்பட்டினம்
மார்ச் 22 - 3ஆவது ஒருநாள் போட்டி - சென்னை
இவர்களை விட அஸ்வினுக்கு ஆவரேஜ் குறைவுதான் - ஐஸ்லாந்து கிரிக்கெட் டுவிட்!
