சாதனையோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், 21 வருடம் 704 விக்கெட்டுகள்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆண்டர்சன் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் விளையாடி 371 ரன்கள் எடுத்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி 136 ரன்கள் மட்டுமே எடுத்து 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக 21 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகளில் விளையாடிய ஆண்டர்சன் 704 விக்கெட்டுகள் கைப்பற்றிய கையோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனைக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் சொந்தக்காரராகியிருக்கிறார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோரைத் தொடர்ந்து 3ஆவது இடத்தில் இருக்கிறார்.
Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!
கடந்த 2003 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டர்சன் 21 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளார். தற்போது 41 வயதான ஆண்டர்சன் தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து வீரர்கள் GUARD OF HONOUR கொடுத்தனர். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு காலில் அணிந்திருந்த ஷூவில் 22.5.2003 என்றும் மற்றொரு கால் ஷூவில் 10.7.2024 என்றும் குறிப்பிட்டிருந்தார். இது அவரது முதல் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை சுட்டிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியா விலகினால் என்ன நடக்கும்?