பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்தியா எப்படி தயாராகிறது? மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!

பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளுக்கான இந்தியா எப்படி தயாராகி வருகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று நடைபெற்றது.

High Level meeting was held to Review how India is preparing for the Paris Olympics 2024 under the Union Minister Dr Mansukh Mandavia rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26 ஆம் தேதி 33ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய நாட்டிலிருந்து வில்வித்தை, குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன், கோல்ஃப், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, ஹாக்கி என்று 16 விளையாட்டு துறைகளில் 48 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 118 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

இந்த 118 தடகள வீரர், வீராங்கனைகளில் 26 பேர் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் மற்றும் 72 விளையாட்டு வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தான் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா எப்படி தயாராகி வருகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விளையாட்டு வீரர்களுக்கு முழு ஆதரவை அளிக்கும் வகையில் போட்டிக்கு முன்னும், பின்னும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த குழுவை நிறுவினார்.

2025 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியா விலகினால் என்ன நடக்கும்?

அதோடு விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்துவிதமான ஆதரவையும் வழங்க ஒருங்கிணைந்து குழு செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது பேசிய அவர், போட்டியில் முக்கியமான கட்டத்தில் நுழையும் விளையாட்டு வீரர்கள் சிறந்த உடல் மற்றும் மன நிலையில் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்றார். மேலும், ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 80 சதவீத விளையாட்டு வீரர்கள் ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், பழக்கவழக்க பிரச்சனைகளை சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் கூறினார்.

தட்டு வடை சாப்பிட்டு நட்டுவுடன் கிரிக்கெட் Quiz நடத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் – வைரலாகும் வீடியோ!

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு செய்து தருவதற்கு Target Olympic Podium Scheme (TOPS) மூலம் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதில், பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சியாளர்கள், நிபுணர்களின் ஈடுபாடு, மறுவாழ்வு மற்றும் காயங்களை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது ஆகியவை அடங்கும்.

முதல் முறையாக இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அறிவியல் உபகரணங்களுடன் கூடிய மீட்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள பார்க் ஆஃப் நேஷன்ஸில் இந்தியா ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது, இதேபோன்ற பிரான்ஸ் உட்பட 14 நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios