2025 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியா விலகினால் என்ன நடக்கும்?

வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இந்தியா விலகினால், இலங்கை அணி தகுதி பெறும்.

What will happen if India pulls out of 2025 Champions Trophy? rsk

சாம்பியன்ஸ் டிராபி வரும் 2025 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா உள்பட மொத்தமாக 8 அணிகள் விளையாட இருக்கின்றனர். பாகிஸ்தானில் நடைபெறும் தொடர் என்பதால், இந்தியா அங்கு சென்று விளையாட வாய்ப்பில்லை. பிசிசிஐ அதற்கு அனுமதிக்காது. இதற்கு முக்கிய காரணம், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் தான். அதன் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்திவிட்டது.

தட்டு வடை சாப்பிட்டு நட்டுவுடன் கிரிக்கெட் Quiz நடத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் – வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருந்தது, ஆனால், அந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான் வரும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடத்தும் தொடர் என்பதால் இந்தியா, பாகிஸ்தான் செல்லாது.

முதல் முறையாக இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஜாம்பவான் கபில் தேவ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு?

மேலும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடைபெற்றால் அதற்கு இந்திய அணி மறுப்பு ஏதும் தெரிவிக்காது. இந்திய அணியும் அந்த தொடரில் பங்கேற்கும். ஆனால், அதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், இந்தியா இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்காது.

இந்த தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் லீக் சுற்று போட்டிகளின் முடிவுகளின் படி புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் உள்பட முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன் டிராபி தொடருக்கு தகுதி பெற்றன. இதையடுத்து 9 மற்றும் 10ஆவது இடங்களில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இருந்தன.

காம்பீர் உடன் மீண்டும் இணையும் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ கருணை காட்டுமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இலங்கை விலகினால், 9ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios