முதல் முறையாக இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஜாம்பவான் கபில் தேவ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு?
1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொத்து மதிப்பு மட்டும் ரூ.250 கோடி ஆகும்.
Kapil Dev Net Worth
இந்திய அணி முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் கபில் தேவ். இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடி ஆகும். கடந்த 1959 ஆம் ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்தார். இதையடுத்து 1978 ஆம் ஆண்டு 1994 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
Kapil Dev Net Worth
இந்திய அணியானது முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரது தலைமையிலான இந்திய அணி தான் முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. 2002 ஆம் ஆண்டில் நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்பட்டார்.
Kapil Dev Net Worth
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவ் ஹரியானா சூறாவளி என்று அழைக்கப்பட்டார். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் 5248 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 434 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
Kapil Dev Net Worth
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்ததோடு 5000 ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை கபில் தேவ் படைத்தார். இதே போன்று 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் 3783 ரன்களோடு 253 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
Kapil Dev Net Worth
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு NCA (National Cricket Academy) மற்றும் இப்போது செயல்படாத ICL ஆகியவற்றில் வேலை பெறுவதற்கு முன்பு கபில் தேவ் இந்திய கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐயின் வர்ணனைக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளார்.
Kapil Dev Net Worth
வர்ணனையாளர், டிவி தொகுப்பாளர், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலமாக வருடத்திற்கு ரூ.12 கோடி வரையில் வருமானம் பெறுகிறார். சராசரியாக மாதத்திற்கு ரூ.1 கோடி வரையில் சம்பாதிக்கிறார். வாரத்திற்கு ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
Kapil Dev Net Worth
மேலும், அவரது சம்பளத்தின் பெரும்பகுதி கிரிக்கெட் வர்ணனை மற்றும் பிராண்ட் ஒப்பந்தம் மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸ் சேனல்களிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதன் மூலமாகவும் வருமானம் பெறுகிறார்.
Kapil Dev Net Worth
கபில் தேவ் வீடு:
டெல்லியில் உள்ள ஆடம்பரமான சொகுசு வீட்டில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார். தினந்தோறும் காலையில் டெல்லி கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரது வீடும், கோல்ஃப் கிளப்பும் அருகாமையில் உள்ளது.
Kapil Dev Net Worth
கபில் தேவ் கார் கலெக்ஷன்:
ஆட்டோமொபைல் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கபில் தேவ் வைத்திருக்கும் பல வாகனங்களில்1983 பதிவு எண் கொண்டதாக இருக்கும். கார் மட்டும் மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் ஆகும். மெர்சிடிஸ் சி220டி, டொயோட்டா ஃபார்ச்சுனர், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350டி, போர்ஷே பனமேரா ஆகிய கார்கள் வைத்திருக்கிறார்.
Kapil Dev Net Worth
கபில் தேவ் சொத்து:
ஜிகாம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 5% பங்குகள் வைத்திருக்கிறார். இது தவிர பாட்னா மற்றும் சண்டிகரில் கேப்டேன்ஸ் ரிட்ரீட் ஹோட்டல் மற்றும் கேப்டன்ஸ் லெவன் என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார்.
Kapil Dev Net Worth
இந்தியா முழுவதிலும் உள்ள மைதானங்களில் ஃப்ளட்லைட்களை ஏற்றும் தேவ் மஸ்கோ லைட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 'ஹரியானா சூறாவளி' பங்குகளையும் கொண்டுள்ளது. மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியம், மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியம் ஆகியவை அவரது முதலீட்டில் பலனடைந்த மைதானங்களில் சில. ITL (இந்தியன் டிரேடிங் லீக்), SAMCO வென்ச்சர்ஸ் ஆகியவற்றில் மேலும், 3 மில்லியன் டாலர் முதலீடு செய்து பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளார்.
Kapil Dev Net Worth
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கபில் தேவ் AIPL ABRO, Palmolive மற்றும் Boost போன்ற நிறுவனங்களுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துள்ளார். இது தவிர, CRED, கம்லா பசந்த் மற்றும் நோவோ நோர்டிஸ்க் ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். கபில்ட் தேவ்வின் முதல் பிராண்ட் "பாமோலிவ் ஷேவிங் கிரீம்" ஆகும்.
Kapil Dev Net Worth
கபில் தேவ் 2000 ஆம் ஆண்டில் லாரஸ் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் ஒரு உரிமம் பெற்ற கோல்ஃப் வீரர். பல பாலிவுட் படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்று படமான 83 என்ற படத்தில் ரன்வீர் சிங் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.