IPL 2023 Mini Auction: நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டர் ஏலத்தில் விலைபோகாத கொடுமை

உலகின் நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், ஐபிஎல் 16வது சீசனுக்கான முதல் கட்ட ஏலத்தில் விலைபோகவில்லை.
 

ipl mini auction 2023 bangladesh senior allrounder shakib al hasan unsold in first phase of auction

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிகமான தொகைக்கு விலைபோனார்கள். சாம் கரனை உச்சபட்சமாக ரூ.18.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது. பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி ரூ.16.25 கோடிக்கும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் ரூ.17.5 கோடிக்கும் எடுத்தன.

IPL Mini Auction 2023: குஜராத் டைட்டன்ஸ் செம ஸ்மார்ட்.. அடக்கத்துடன் அமைதியான, தெளிவான செயல்பாடு

நிகோலஸ் பூரன், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்களையும் அணிகள் அதிகமான தொகைக்கு எடுத்தன. சன்ரைசர்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.42 கோடியுடன் ஏலத்திற்கு சென்றதால் துணிந்து அதிக தொகைக்கு தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.

IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச தொகையை கொடுத்து பென் ஸ்டோக்ஸை எடுத்த சிஎஸ்கே

பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கேமரூன் க்ரீன் ஆகிய ஆல்ரவுண்டர்கள் மீது அணிகள் அதீத ஆர்வம் காட்டி பெரிய தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்த நிலையில், ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 1 ஆல்ரவுண்டரான வங்கதேசத்தை சேர்ந்த சீனியர் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

IPL Mini Auction 2023: ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாம் கரன்..! வரலாற்று சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலமாக ஆடிவரும், ஐபிஎல்லிலும் நல்ல அனுபவம் கொண்ட, சீனியர் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முனையவில்லை. இதையடுத்து முதல் கட்ட ஏலத்தில் ஷகிப் விலைபோகவில்லை.

கடைசியில் மீண்டும் ஏலம் விடப்படுவார். அப்போது அணிகள் தாங்கள் விரும்பிய வீரர்களை எடுத்தபின்பும் கையில் பணம் இருக்கும்பட்சத்தில், கடைசியில் ஷகிப் அல் ஹசனை எடுக்க முன்வரலாம். 

IPL Mini Auction 2023: ஹாரி ப்ரூக்கிற்காக அடித்துக்கொண்ட SRH - RR.! பெரிய தொகைக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்

பெரிய தொகைக்கு விலைபோவார் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ரைலீ ரூசோவும் விலைபோகவில்லை. இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டியில் சதமடித்த ரூசோ மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios