IPL 2023 Auction: ஹாரி ப்ரூக்கிற்காக அடித்துக்கொண்ட SRH - RR.! பெரிய தொகைக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலத்தில் இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 10 அணிகளில் உள்ள 87 இடங்களை நிரப்புவதற்கான இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம்விடப்படுகின்றனர்.
முதல் வீரராக கேன் வில்லியம்சன் ஏலம் விடப்பட்டார். அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. 5 சீசன்கள் தங்கள் அணியை வழிநடத்திய கேன் வில்லியம்சனை கழட்டிவிட்ட சன்ரைசர்ஸ் அவரை கண்டுகொள்ளவில்லை. எந்த அணியும் ஆர்வம் காட்டாத நிலையில், கடைசியில் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்தது.
அடுத்ததாக இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் ஏலம் விடப்பட்டார். ரூ.1.5 கோடியை அடிப்படை விலையாக கொண்ட அவர் மீது அணிகள் ஆர்வம் காட்டினார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அவருக்காக கடுமையாக போட்டியிட்டன. இரு அணிகளுமே அவரை விட்டுக்கொடுக்கவில்லை. ஹாரி ப்ரூக் ரூ.13 கோடி வரை சென்றதால் ராஜஸ்தான் அணியிடம் மொத்தமாக அவ்வளவுதான் தொகை இருந்தது. அதனால் அத்துடன் நிறுத்திக்கொண்டது. ரூ.13.25 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து ஹாரி ப்ரூக்கை எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்..! புதிய தலைவர் நியமனம்