பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்..! புதிய தலைவர் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டு, நஜாம் சேதி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

ramiz raja sacked as pakistan cricket board chairman and najam sethi appointed as new chairman

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டிலிருந்து 1997ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய ரமீஸ் ராஜா 250க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஒன்றே கால் ஆண்டாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா, அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.  அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடப்பதாக திட்டமிடப்பட்ட நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது; ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதற்கு கடுமையாக ரியாக்ட் செய்தார் ரமீஸ் ராஜா.

இந்திய அணியில் இடத்தை இழந்த வெறியில் ஆடி இரட்டை சதமடித்த ரஹானே.. ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இன்னிங்ஸ் வெற்றி

ஐசிசிக்கு அதிகமான பங்களிப்பை செய்யும் பிசிசிஐ தான், சர்வதேச கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த கிரிக்கெட் வாரியம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பிசிசிஐக்கு எதிராக துணிச்சலாக பேசினார் ரமீஸ் ராஜா. அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தான் நடக்கும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானும் கலந்துகொள்ளாது என்று மிரட்டினார் ரமீஸ் ராஜா.

பாகிஸ்தான் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் முதல் முறையாக 3-0 என டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வு விவகாரத்திலும் ரமீஸ் ராஜா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

IPL Mini Auction 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் டாப் 5 ஆல்ரவுண்டர்கள்..! அடித்துக்கொள்ளும் அணிகள்

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், புதிய தலைவராக முன்னாள் வீரர் நஜாம் சேதி நியமிக்கப்பட்டவுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios