இந்திய அணியில் இடத்தை இழந்த வெறியில் ஆடி இரட்டை சதமடித்த ரஹானே.. ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
 

ajinkya rahane double century mumbai beat hyderabad by an innings and 217 runs in ranji trophy match

ரஞ்சி தொடரில் மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணி:

பிரித்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சர்ஃபராஸ் கான், ஹர்திக் தாமோர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, சித்தார்த் ரௌட், மோஹித் அவஸ்தி.

IPL Mini Auction 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் டாப் 5 ஆல்ரவுண்டர்கள்..! அடித்துக்கொள்ளும் அணிகள்

ஹைதராபாத் அணி:

தன்மய் அகர்வால் (கேப்டன்), அக்‌ஷத்  ரெட்டி, ரோஹித் ராயுடு, தயன் தியாகராஜன், தெலுகுபல்லி ரவி தேஜா, மிக்கில் ஜெய்ஸ்வால், பிரதீக் ரெட்டி, ராகுல் புத்தி, மேஹ்ரோத்ரா ஷேஷான்க், சிண்ட்லா ரக்‌ஷன் ரெட்டி, கார்த்திகேயா கக்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா வழக்கம்போலவே அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 195 பந்தில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 162 ரன்களை குவித்தார் பிரித்வி ஷா. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அஜிங்க்யா ரஹானே, புஜாராவை போல மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் சிறப்பாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். 204 ரன்களை குவித்தார் ரஹானே. சர்ஃபராஸ் கானும் 126 ரன்களை குவிக்க, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 651 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஹைதராபாத் அணி, ரோஹித் ராயுடு மட்டுமே சிறப்பாக ஆடி 77 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஹைதராபாத் அணி. மும்பை பவுலர் ஷாம்ஸ் முலானி அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 7 விக்கெட் வீழ்த்தினார்.

கிலியன் எம்பாப்பே ஃபிட்னெஸ் ரகசியம்.. டயட் & ஒர்க் அவுட் விவரம்..! நீங்களும் தெரிந்துகொண்டு ஃபிட் ஆகுங்க

437 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஹைதராபாத் அணி வீரர்கள் இந்த இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பியதால், 220 ரன்களுக்கே ஆல் அவுட்டானது அந்த அணி. 2வது இன்னிங்ஸில் ராகுல் புத்தி 65 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய ஷாம்ஸ் முலானி, 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios