Asianet News TamilAsianet News Tamil

பவுலர்களின் வயிற்றில் புளியை கரைத்த பிரேஸ்வெல்: காட்டு காட்டுன்னு காட்டினாலும் இந்தியா த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

India Won by 12 Runs in First ODI against New Zealand in Hyderabad
Author
First Published Jan 18, 2023, 10:21 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதில், ரோகித் சர்மா 34, விராட் கோலி 8, இஷான் கிஷான் 5, சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது நடுவரது தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நீ கொஞ்சம் குசும்புக்காரன் தான்: ஹர்திக்கை ஏமாத்தி அவுட்டாக்கிய டாம் லாதமுக்கு பாடம் புகட்டிய இஷான் கிஷான்!

கிரிக்கெட் பார்த்த ஒவ்வொருவரும் மூன்றாவது நடுவரை விமர்சித்து வருகின்றனர். அதோடு ஏமாத்தி ஹர்திக் பாண்டியாவை அவுட்டாக்கிய டாம் லாதம்மை கடுமையாக சாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பிசிசிஐயும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டா? இல்லையா? என்று கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இவ்வளவு ஏன், ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மூன்றாவது நடுவரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

கிளவுஸை வச்சு ஸ்டம்பை அடித்தால் அவுட்டா? டுவிட்டரில் டிரெண்டாகும் ஹர்திக் பாண்டியா நாட் அவுட் ஹேஷ்டேக்!

ஒருபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார். அவர் 145 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 23 வயது 132 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இறுதியாக சுப்மன் கில் 149 பந்துகளில் 9 சிக்சர்கள் 19 பவுண்டரிகள் உள்பட 208 ரன்கள் எடுத்தார்.

 

 

ஒன் மேன் ஆர்மி சுப்மன் கில் : நியூசிலாந்து பௌலர்களை வச்சு செஞ்சு இளம் வயதில் 208 ரன்கள் அடித்து சாதனை!

இதையடுத்து, கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலென் நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது தான் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. சான்ட்னர் 45 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிப்லே 0, லக்கி பெர்குசன் 8 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

சொந்த மண்ணில் சிராஜ் விளையாடுவதை நேரில் பார்த்து ரசித்த குடும்பத்தினர்!

இறுதியாக டிக்னர் களமிறங்கினார். கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூர் பந்து வீச வந்தார். வேறு யாரும் இல்லாத நிலையில், கடைசி நேரத்தில் ரோகித் சர்மா அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை அழைத்தார். அவரும் வந்து பந்து வீச முதல் பந்தில் பிரேஸ்வெல் சிக்சர் விளாசினார். 2ஆவது பந்து வைடாக சென்றது. எனினும், 3ஆவது பந்தை நம்பிக்கையுடன் வீசினார். அதுவும், யார்க்கராக வீச பிரேஸ்வெல் காலில் பந்து பட்டு பவுண்டரிக்கு சென்றது. அப்போது நடுவரிடம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்க நடுவரும் அவுட் கொடுத்தார். இதை எதிர்த்து பிரேஸ்வெல் டிஆர்எஸ் சென்றார். டிவி ரீப்ளேயில் பந்து சரியாக மிடில் ஸ்டெம்பில் படுவது தெரிந்தது.

சச்சின் மகள் சாராவிற்கும், சுப்மன் கில்லுக்கும் திருமண நிச்சயதார்த்தமா? டுவிட்டரில் டிரெண்டாகும் சாரா ஹேஷ்டேக்

இதையடுத்து அவுட்டும் உறுதி செய்யப்பட பிரேஸ்வெல் 78 பந்துகளில் 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 140 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில், சிராஜ் விக்கெட் எடுத்து கொடுத்தார்.

இதெல்லாம் உன்னால தான் முடியும்: அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்து விராட் கோலியை சமன் செய்த சுப்மன் கில்!

பந்து வீச்சு தரப்பில் சிராஜ் 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன் உள்பட 4 விக்கெட் கைப்பற்றி 46 ரன்கள் கொடுத்தார். முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றி 69 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 7 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 70 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 2 விக்கெட் கைப்பற்றி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஆனால், 7 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் 7.2 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 54 ரன்கள் கொடுத்தார்.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி வரும் 21 ஆம் தேதி ராய்பூரில் நடக்கிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios