சொந்த மண்ணில் சிராஜ் விளையாடுவதை நேரில் பார்த்து ரசித்த குடும்பத்தினர்!
ஹைதராபாத்தில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சிராஜ் விளையாடுவதை அவரது குடும்பத்தினர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார். 23 வயது 132 நாட்களை கடந்த நிலையில் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.
இவ்வளவு ஏன், 19 இன்னிங்ஸில் 1000 ரன்களையும் கடந்துள்ளார். சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்றாவது நடுவர் தவறான முறையில் அவுட் கொடுத்துள்ளார். விக்கெட் கீப்பர் டாம் லாதம் தனது கையால் ஸ்டெம்பிற்கு மேலே வரும் பந்தை பிடித்துக் கொண்டு ஸ்டெம்பை தட்டி விடுகிறார். இது டிவி ரீப்ளேயில் தெளிவாக தெரிகிறது.அப்படியிருந்தும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துள்ளார். இதன் காரணமாக டுவிட்டரில் ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மூன்றாவது நடுவரை விமர்சித்து கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஷர்துல் தாக்கூர் கொடுத்த வாய்ப்பு: 23 வயசு, 132ஆவது நாளில் இரட்டை சதம் அடித்து சுப்மன் கில் சாதனை!
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து கடின இலக்கை நியூசிலாந்து அணி துரத்தியது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவோன் கேன்வே 10 ரன் எடுத்திருந்த போது சிராஜ் வீசிய பந்தை ஸ்கொயர் லெக் பக்கமாக அடிக்க அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த குல்தீப் யாதவ் பந்தை கச்சிதமாக கேட்ச் பிடித்தார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சிராஜ் முதல் விக்கெட் கைப்பற்றினார். 5 ஓவர்கள் வரை வீசிய சிராஜ் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி சிராஜ் ஹைதராபாத்தில் பிறந்துள்ளார். அவரது தந்தை முகமது கோஷ் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர். தாயா ஷபானா பேகம். சகோதரர் முகமது இஸ்மாயில் (சாப்ட்வேர் இன்ஜினியர்). இந்த நிலையில், சொந்த மண்ணில் சிராஜ் விளையாடுவதை அவரது குடும்பத்தினர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். முதல் விக்கெட் கைப்பற்றிய சிராஜ் தனது குடும்பத்தினரைப் பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.