ஷர்துல் தாக்கூர் கொடுத்த வாய்ப்பு: 23 வயசு, 132ஆவது நாளில் இரட்டை சதம் அடித்து சுப்மன் கில் சாதனை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் 208 ரன்கள் அடித்து இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரோகித் சர்மா 34 ரன்களிலும், விராட் கோலி 8 ரன்னிலும், இஷான் கிஷான் 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கீப்பிங் கிளவுஸ் ஸ்டம்பில் பட்ட முறையில் ஆட்டமிழந்தார். மூன்றாவது நடுவரின் தவறான முடிவால் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். பந்து ஸ்டம்பை விட்டு வெளியில் செல்வது சரியாக தெரிந்தாலும், கீப்பிங் க்ளவுஸ் ஸ்டம்பில் பட ஹர்திக் பாண்டியா (28) ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியா அவுட்டிற்கு விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி டுவிட்டரில் ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இவரைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். அப்போது, சுப்மன் கில் அடித்து ரன் எடுக்க ஓடி வர ஷர்துல் தாக்கூர் வராமல் இருந்த நிலையில், பந்து பீல்டர் கைக்கு சென்று கீப்பர் கைக்கு வர, சுப்மன் கில் அவுட்டாக கூடாது என்பதற்காக தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்தார் ஷர்துல் தாக்கூர். அப்போது சுப்மன் கில் 169 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சுப்மன் கில்: 6ஆவது அரைசதம் அடித்து அசத்தல்!
ஷர்துல் தாக்கூர் கொடுத்த வாய்ப்பின் காரணமாக 145 பந்துகளில் 200 ரன்கள் அடித்தார். அதுவும் ஹாட்ரிக் சிக்சர் அடித்து 200 ரன்கள் விளாசினார். இளம் வயதில் ஒரு இந்திய வீரர் 200 ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். 23 வயது 132 நாட்கள் ஆன நிலையில், சுப்மன் கில் இந்த சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி 19 ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். அதிரடி காட்டிய சுப்மன் கில் இறுதியாக 149 பந்துகளில் 19 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உள்பட 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!
நியூசிலாந்து தரப்பில் பந்து வீச்சில் டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். லக்கி பெர்கூசன், பிளேர் டிக்னர் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்க இருக்கிறது.