இதெல்லாம் உன்னால தான் முடியும்: அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்து விராட் கோலியை சமன் செய்த சுப்மன் கில்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஒரு நாள் போட்டியில் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
 

Shubman Gill hit his 3rd ODI Century and crossed 1000 runs in 1st ODI against New Zealand

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் தற்போது நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வழக்கம் போல் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். இருவரும் பவுண்டரியும், சிக்சருமாக விளாச இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் சுப்மன் கில்: 6ஆவது அரைசதம் அடித்து அசத்தல்!

ஆனால், ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலி 8 ரன்களிலும், இஷான் கிஷான் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறார். இந்த நிலையில், ஒருபுறம் பவுண்டரியாக விளாசிய சுப்மன் கில் தனது 19 ஆவது இன்னிங்ஸில் 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் சதம் (116 ரன்கள்) அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 வாரங்களில் வீடு திரும்பும் ரிஷப் பண்ட்: விளையாடுவதற்கு 6 மாதமாகும்!

2023 ஆம் ஆண்டுகளில் 2 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம் அடித்து விராட் கோலியின் 2 சதம் சாதனையை சுப்மன் கில் சமன் செய்துள்ளார். சுப்மன் கில் 19 இன்னிங்ஸில் அடித்த சதத்தை ஷிகர் தவான் 17 இன்னிங்ஸிலேயே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, 19 இன்னிங்ஸில் ஒரு நாள் போட்டியில் 1000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இமாம் உல் ஹாக்கை சமன் செய்துள்ளார். பாகர் ஜமான் 18 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தார். விவியன் ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், குயிண்டன் டி காக், பாபர் அசாம் ஆகியோர் 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13 ஒரு நாள் போட்டிகளில் சுப்மன் கில் 64, 43, 98 (நாட் அவுட்), 82 (நாட் அவுட்), 33, 130, 3, 28, 49, 50, 45 (நாட் அவுட்), 12 மற்றும் 70 என்று ரன்கள் சேர்த்துள்ளார். மொத்தமாக 707 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் நிச்சயமாயிருச்சு, தேதி தான் குறிக்கல: அக்‌ஷர் படேல் - மேகா திருமணம் எப்போது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios